பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/646

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

651 பழமொழி. அஃதாவது ஒரூரில் ஒரு பண்டத்தையே இரண்டு. விலைக்கு விற்று வாணிபஞ் செய்வது போலும் முறைமை. திருத்தக்க தேவரும் ஒருரிரண்டஃமாயிற்று' என்று சீவக. சிந்தாமணியில் (2087) இப்பழமொழியினைக் கையாண் டுள்ளார். வணிகர் ஒரே ஊரிலேயே ஒரு பண்டத்திற்கு இரண்டு விலைகள் கூறி விற்கக்கூடாது என்பது இதனால் தெரிகின்றது. இதுகாறும் கண்டவற்றால் சேரமான் பெருமாளின் துாய அடக்கம் நிறைந்த பக்திச் சிறப்பும், நடை நலமும் தொடை நலமும் சான்ற புலமைச் செவ்வியும், ஏணார் இருந்தமிழ் எனத் தமிழைக் குறிப்பிட்டுள்ளமை (62). கொண்டு அவர்தம் தளராத தண்டமிழ்ப் பற்றும், தான் பெற்ற இன்பம் வையகமும் பெற வேண்டும் என்ற பரந்த நோக்கமும், திருமுறைகளில் தோய்ந்த நெஞ்சமும், பாக் களில் அணிகளை அழகுறப் பொருந்த அமைக்கும் மாட்சி யும், அகப்பொருள் அமைதி துலங்கப் பாடும் கவிதை மரபும், மெய்யுணர்வு ததும் பி நிற்கும் பெற்றியும் -2, Ատ ՛ இன்னோரன்ன பல சிறப்புகள் ஒருங்கே புலனாதல் கண்டோம்.