பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருவாரூர் மும்மணிக் கோவை தமிழில் வழங்கும் தொண்ணுரற்றாறு வகைச் செய்யுள் நூல்களில் ஒரு வகையின கோவை நூல்களாகும். தொல் காப்பியனார் கூறும் விருந்து' என்னும் வனப்பு வகையைச் சார்ந்தது. இக் கோவை அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்ததாகும். சில பிரபந்தங்களில் அகப்பொருள் இலக்கியச் செய்யுட்கள் அமைந்திருப்பினும் கிளவிகளாக வகுத் துத் துறைகளாக விரித்து ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி அமையக் கோக்கப் பெற்றுப் பாடப் படுவதாதலின் இந் நூ ல்வ ைக கோவை' என்னும் பெயர் பெற்றது. அகப் பொருட் சுவை தழுவி வருதலின் அகப்பொருட் கோவை' என வழங்கப் பெறும். அகப்பொருட்குரிய ஐந்திணைகளும் அமைந் திருத்தலின் இஃது ஐந்திணைக் கோவை' எனவும் வழங்கப் பெறும். குலோத்துங்க சோழனைச் சொல்லியவைக் திணைக்கோவை பாட என்று குலோத்துங்கன் கோவையும், திருந்துதமிழிலக்கணவைந் திணைக்கோவை என்று துறைமங்கலம் சிவப்பிரகாசர் பாடலும், நம்மா லியற்றிக் கொடுத்திடு மைந்திணைக்கோவை யேற்றனையால் என்று திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடலும் குறிப்பிடுவதனால் கோவை நூல்கள் ஐந்திணைக் கோவை' எனவும் வழங்கப்பட்டன என்பது புலனாகும். தொல்காப்பியம், இறையனாரகப் பொருள், நம்பியகப் பொருள், வீர சோழியம், இலக்கண விளக்கம் முதலிய