பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

653 நூல்களில் கோவையின் இலக்கணம் நன்கு கூறப்படு: கின்றது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்களிலும், திணை மாலை நூற்றைம்பது முதலிய கீழ்க்கணக்கு நூல்களிலும் வரும் செய்யுட்கள் இவற்றின் இலக்கியம் என்பர். பொருள் தொடர்நிலைச் செய்யுட்களாக ஒன்றி னொன்று தொடர்ந்து ஒரு கோவையாக வருதலின் கோவை' என்பது காரணப் பெயர் ஆகிறது. கோவை யுந் தொகையு மாவயின் வரையார்' என்பதனால் இது தொடர்நிலைச் செய்யுள் எனப் பேராசிரியர் கூறி யுள்ளார். மேலும் தண்டியலங்கார உரையாசிரியர் "தமிழ் முத்தரையர் கோவை' என்னும் ஒரு நூலினைச் சிறு காப்பியத்திற்கு உதாரணமாகக் காட்டுவதால், கோவைகள், சிறு காப்பியங்களென்று வழங்கப்பட்டன என்பதும் பெறப்படும். ஆய்ந்த கலித்துறைதான் நானு றகப்பொருண்மேல் வாய்ந்தநற் கோவையாம்' என்று வெண்பாப் பாட்டியலும், கோவை என்பது கூறுங் காலை மேவிய களவு கற்பெனும் கிளவி ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ முந்திய கலித்துறை நானு றென்ப" என்று பன்னிரு பாட்டியலும் கோவைக்கு இலக்கணம் கூறும். இதனால் கோவை என்பது கட்டளைக் கலித்துறை நானுாறு அகப்பொருள் மேல் வருவன என்பதும், அகப் பொருள் இலக்கணத்தைத் தழுவி ஐந்திணையிற்றிரியாதன 1. திருச்சிற்றம்பலக் கோவையார்; 252, உரை. 2. வெண்பாப் பாட்டியல்; 15. 3. பன்னிரு பாட்டியல்; 221.