பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 வாய்ப் பொருந்திய களவும் கற்புமாகிய கைக்கோள்கள் இரண்டினுக்கு உரிய கிளவிகள் பழைமையாகிய முறையின் வரும் கட்டளைக் கலித்துறை நானுாற்றாற் பாடப்படும் என்பதும் தெரிய வருகின்றன. இனி, மும்மணிக்கோவையின் இலக்கணம் காண் போம். வெண்பாப் பாட்டியல், ஈண்டிய முப்பதா யீரெண் கலைவண்ணம் மூண்டதொலி யந்தாதி முப்பதாம்-ஆண்டகவல் முன்முறையே வெண்பா கலித்துறைய வந்தாழி மும்மணிக்கோ வைக்கு முதல்' எனக் குறிப்பிடுகின்றது. அதாவது நேரிசை ஆசிரியப் பாவும், நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் முறையே அந்தாதியாக முப்பது கூடியது மும்மணிக் கோவை' என்பது பெறப்படுகிறது. இலக்கண விளக்கப் பாட்டியல், அகவல் வெண்பா அசையெண் கலித்துறை தொகை முப்பதுபெறச் சொற்றொடர் நிலையிற் கூறுதல் மும்மணிக் கோவை யாகும் என்று குறிப்பிடுகின்றது. பன்னிரு பாட்டியல், வெள்ளையும் அகவலும் நேரிசை ஆகக் கலித்துறை வர அந் தாதி ஆகி முறைமையின் இயல்வது மும்மணிக்கோவை." என்று குறிப்பிடுகின்றது. பன்னிரு பாட்டியலின் மேற் கோள் நூற்பாக்கள், 4. வெண்பாப் பாட்டியல்; 13. 5. இலக்கண விளக்கப் பாட்டியல்; 55. 6. பன்னிரு பாட்டியல்; 56.