பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

655 தோன்றிய அகவல் வெள்ளை கலித்துறை மூன்றும் வருவது மும்மணிக்கோவை என்றும், மும்மூன் றொருபொருள் மிகைவரும் என்ப என்றும் குறிப்பிடுகின்றன. நவமணிகளுள் நிறங்கள் வேறுபட்ட புருடராகம், வைடு ரியம்,கோமேதகம் என்னும் மூவகை மணிகளாற் கோக்கப் பெற்ற கோவையைப் போலவே தம்முள் வேறுபட்ட ஆசிரியப்பா வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைச் செய்யுட்கள் முப்பதால் அமைக்கப்படுவது மும் மணிக்கோவை' என்று வழங்கப்படும். இந்த மூன்று வகைச் செய்யுளும் அந்தாதியாகியும் ஈற்றுச் செய்யுளின் இறுதியும் முதற் .ெ ச ய் யு ளி ன் முதலும் ஒன்றுபட்டு மண்டலித்தும் அமைந்துவரும். சொற்றொடர் நிலைச் செய்யுளில் அடங்கும் இம் மும்மணிக் கோவையினை யாப்பருங்கல விருத்தியுரைகாரர், இறுதி யெழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பம், உதயணன் கதையும் கலியாண கதையும் பன்மணி மாலையும் மும்மணிக் கோவையும் என்னும் அவற்றுட் கண்டு கொள்க' என்று குறிப்பிட்டுள்ளதி லிருந்து செய்யுளந்தாதிக்கு மும்மணிக்கோவை உதாரண மாதல் அறியலாம்,

இத்தகைய சிறுபிரபந்தங்கள் படிப்பவர்களுக்கு எளிதிற் பல கருத்துக்களையும் சொற்பொருட் சுவைகளை யும் அன்பையும் புலப்படுத்தி ஆசிரியருடைய ஆற்றலை விளக்குகின்றன. தொடர்ந்து பயிலும் ஆற்றல் இல்லாத

7. மும்மணியா வனசொன்ன புருடராகம் உறுவயிடு ரியங்கோமே தகமே யென்றாங் கோதுவர். ' -திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்; 25 : 22 8. யாப்பருங்கல விருத்தி; நூற்பா : 53, உரை.