பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66.3% ான்று முதற்பாட்டுக் குறிப்பிடுகின்றது. வானத்தில் வில், தோன்றுதல், இந்திர கோபம் ஊர்தல், காந்தள், முல்லை, கொன்றை முதலிய காட்டுநிலப் பூக்கள், மலர்தலும், மயிலாடுதலும், வாடை வீசுதலும் கார் காலத்தில் நடிை. பெறும் செயல்களாதலின் இவற்றிற் கேற்பவே தலைவி. மாட்டும் பல்வேறு மாற்றங்கள் விளைந்தன என எடுத்துக் காட்டுவர் ஆசிரியர். ,蕊。 கார்காலம் முகிழ்த்த அளவில் தலைவிமாட்டுத் தோன்றிய துன்பத்தினை இரண்டாம் பாடல் இனிமை ததும்ப மொழிகின்றது. . . . இடப வாகனனான இறைவன் கண்டத்தைப் போல், கறுத்த கார்காலம் தோன்றிய அளவில், காதலன் சென்ற தேர் அதுகாறும் வாராததன் விளைவாகத் தலைவியின் கைவளைகள் தாமே கழன்றன; மேனியில் பசலை நிறம் ஊர்ந்தது; கண்கள் நீரைப் பொழிந்தன.

மேலும் மூன்றாம் பாடல் கார்காலத்தின் வரவால் தலைவி படும். வாட்டத்தினையே மேலும் மிகுத்துரைக் கின்றது. ... சசனது திருநீலகண்டம் போன்று இருண்ட் மேகம் இடியுடன் கூடி ஒலிக்கின்றது. இது, வானவெளியில் நடை பெறும் செயல். கீழே முல்லை நிலத்தில், மலைச் சாரலின் பாங்கர் இனம் இனமாக மயில்கள், ஆனிரை, மடமான்கள் முதலியன ஆணும் பெண்ணுமாகக் கலந்து விளையாடு கின்றன. இக்காதற் காட்சிகள் தலைவனைப் பிரிந்து துயருறும் தலைவிக்கு மேலும் துன்பத்தினை மிகுவிப்ப்ன் தொடரே தலைவியின் துயர மிகுதியைப் புலப்படுத்துவ, தாகும். . . . . . . . . . . . ി நான்காவது பாடல் தலைவி கூற்றாக வருகின்றது. கார்வானம் உறை கழித்த ஒள்வாள் போல மின்னு கின்றது; இடியென்னும் அதிர்குரல் முரசென ஆர்க்கின்றது;