பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 கார் தன் வில்லை வளைத்து மழைத்துளிகளாகிய சரங்களை எய்கின்றது. அதனால் களா, வெண்காந்தள், செங்காந்தள், காயா ஆகிய மரங்கள் மலர்ந்து இந்திர கோபத்துடன் கொடுந்துயர் விளைப்பனவாயின. ஆயின் தலைவரோ பகைவர்தம் பெரிய மதில்களைப் போக்கற வளைத்து இரவும் பகலும் காவலை மேற்கொண்டு வேந்தனது பாசறையில் வீற்றிருக்கின்றார். இவ்வாறு தலைவி கார்ப்பருவங் கண்டிரங்குகின்றாள். இப்பாடல்வழி முல்லை நிலத்தில் கார் காலத்தில் மலரும் பூக்கள் காதலர்ப் பிரிந்தார்க்குக் கலக்கத்தை மிகுவிக்கும் பெற்றியன என்பதனை அறியலாம். ஐந்தாம் பாடலும் மேற் கூறிய கருத்தினையே வெளிப் படுத்தி நிற்கின்றது. தோன்றி மரத்தில் இப்போலும் மலர் தோன்றவும், மயில்கள் ஆரவாரித்து ஆடும்படியும் கார்காலம் வந்தது. ஆதலின் தலைவிக்கு ஆராத்துயர் பெருகிற்று. அடுத்த பாடல் தலைவன் தான் குறித்துச் சென்ற கார்ப்பருவத்தே திரும்பிவரவும் அ த ைன க் கண்ட தோழியின் கூற்றாக அமைந்துள்ளது. - முழக்கத்துடனும் மின்னலுடனும் கார்மேகம் கவிந்தது. அக்கார்கால வரவோடு காதலர் தேரும் தெருவெலாம் ஓசை யெழுப்பி வந்தது. தலைவி கையினின்றும் கழன்று வீழ்ந்த சிறுவளைகள் முன்கையிற் செறியலாயின. தலைவன் பொருள்வயிற் பிரிந்தபோது தலைவி உற்ற ஆற்றாத் துயர நிலையினை ஏழாவது பாடல் எடுத்து மொழிகிறது. - - தலைவன் வருத்துந் தெய்வங்களையுடைய மலை வழியிற் செல்லுதல் அருமையைப் பொருட்படுத்தாமல், வழியிடத்தே மலர்ந்து மணம் பரப்பும் மலர்களைச் சூடி,