பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

665 இரவில் தன் கையிலுள்ள ஒளியுமிழும் வேலே முன்னடி காட்டும் விளக்காகக் கொண்டு காட்டாற்றின் கடுவிசை வெள்ளத்தையும் நீந்திக் கடந்து வேறு துணையின்றிச் செல் கிறான். அதுபோது அவன் தோற்றப் பொலிவில் மயங்கிய வானரமகளிர் அவனைத் தேவகுமரன் என்று எண்ணிக் கொண்டு அவனது வலிய பரந்த மார்பில் அணைதற்கு மிகு காதலுடையவர் ஆவர் போலும் என ஐயுற்றுப் புலந்த உள்ள மொடு தலைவி துயிலாக் கண்ணளாக உள்ளாள். தன் கண்ணெதிரே மான்கள் தம் துணையுடன் திரியும் காதற் காட்சியினைக் கண்டு செயலற்றாள். தன் கைவிரல் களை நெரித்து விம்மிப் பெருமூச்செறிந்து திருமகள் அழுவது போல எல்லையற்ற பெருந்துயர் உற்றனள். அடுத்த பாடல், தலைவன் வேழம் வினாதல் துறை யமைந்த பாடலாகும். பாங்கியற் கூட்டம் விரும்பிச் சென்ற தலைவன், தலைவியுடன் அவள் இருந்த தினைப் புனத்திடைச் சென்று, அவர்கள் குறிப்பறிதற் பொருட்டு, தான் வேட்டையாடித் துரத்திவந்த களிறொன்று இப் பக்கமாகப் புகுந்ததோ என்று அவர்களை உசாவுதல் ஆகும். திருவாரூர் ஈசனால் முன்னாளில் தோலுரிக்கப்பட்ட வெஞ்சின யானை போன்றதொரு களிறு புனத்தின் பக்க மாகப் போனதுண்டோ என்று கேட்டான் தலைவன். கட்டளைக் கலித்துறையி லமைந்த அடுத்த பாடல் (9) தலைவன் இரவுக் குறி வருதலைப் பாங்கி ஏதங்கூறி விலக்குதல் என்னும் துறையின்பாற்படும். களிறுகள் இயங்குதலால் மக்கள் எவரும் நடமாடாமல் ஆள் வழக்கே அற்றுக்கிடக்கும் மலைவழியில் வேலே துணை யாகக் கொண்டு செறிந்து கிடக்கும் நள்ளிருளில் அறிவின்றி நீ வருவாயோ? என்று பாங்கி, இரவுக்குறி வந்த தலைவனைப் பார்த்துப் பேசுவதாக இப் பாடல் அமைந் துள்ளது. - . .