பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 அடுத்த பாடல் (10) தலைவன்-தலைவியர்க்குள் கூட்ட் முண்மையைத் தோழி முன்னுறவுணரும் திறம் தெரிந்து கூறியதாகும். . . . . ஈசனது மராமரச் சோலை செறிந்த சிராமலைச் சாரலில் என் தோழி (தலைவி) சூட வேண்டி நறுமணஞ் சான்ற புதுமலர் கொய்து வருவதற்கு நான் அவளைப் பிரிய நேர்ந்தது சற்று நேரத்திற்கு முன்புதான் ஆயினும் இச் சிறு காலத்துள்ளே இவளது கூந்தலணி சிதைந்தது: மாலை பரிந்தது; நெற்றியில் இடப்பட்ட திலகமும் அழிவுற்றது: கண்களோவெனில் தீட்டிய மைநிறம் மாறிச் செந்நிறம் பெற்று, உள்ளறிந்த கொடுவினையை உரைப்பன் போன்றன. செவ்வாயும் சேறுபட்டது. திருமுகம் வியர்வை உட்கொண்டும், கொங்கைகள் பூசிய சந்தனம் அழிந்தும், அணிந்த மேகலையும் துகிலும் நிலை கலங்கியும் போனமை யால், இதற்குரிய காரணம் யாது என்று ஆராய்ந்தும் அதன் காரணம் என்னால் அறியப்பட முடியவில்லை" என்று. தோழி முன்னுறவுணர்ந்து கூறினாள். இங்குத் தலைவி.பால் தோழி கண்ட மாற்றங்கள் தலைவிக்குத் தலைவன் கூட்டமுண்மையை உணர்த்தியன பதினோராவது பாடல் புனத்திடைத் தம்மை நோக்கி வரும் தலைவன் வருகையைத் தோழி தலைவிக்கு உரைத்த தாகும். - கொடி போன்ற இடையினை உடையவளே! முக்கண் பெருமானாகிய சிவபெருமானின் சேயான முருகனைப் போல ஒருவன் இங்கு வந்து, பொழுது போய் இருள் வந்துற்றாலும் இப் பூம்புனத்தைக் காப்பான் போலத் தங்கி, தன் மனத்தினுள்ளே அழுத்திக் கொண்டிருக்கும் எண்ணத்தை வெளியிடக் கூசியவனாய் உள்ளான்' என்று தோழி தலைவனின் உட்கிடக்கையினை உணர்ந்து, தலைவிக்கு எடுத்துரைத்தாள்.