பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

667, அடுத்த பாடல் (12), தலைவன் கையுறையாக அளித்த தழையைத் தான் ஏற்றதனைத் தலைவிக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. !--, - காவற் புனத்தினின்று போகாமல் என் எதிரில் வந்த தலைவரைச் சந்தித்த எனக்கு, ஒளி சிறந்த பூந்தாரையும் தழையுடையையும் தலைவர் விரும்பியளித்தார். அவற்றி லொன்றையும் மறுக்க முடியாமல் யான் ஏற்றுக் கொண்டேன் என்று தோழி கூறினாள். மறுப்பின்றித். தோழி தலைவன் கையுறையை ஏற்றுக் கொண்ட காரணம் தினைப்புனத்திடைக் காவலில் நின்ற தம்மைத் தாக்க வந்த களிற்றைக் கடிந்து காத்ததும், தம்மாட்டு நீங்காத அன்பு காட்டுவதுமாகும். . . . . - - பதின்மூன்றாவது பாடல், தலைவியின் உடன் போக்கிற்குச் செவிலித்தாய் வருந்திக் கூறும் கூற்றாக வந்துள்ளது. திருவாரூர் பிறந்த என் பூங்கொடி மடந்தை, தன் மனையின்கண் நிறைந்துள்ள மட்டற்ற செல்வத்தில் மகிழ்ச்சி, கொள்ளாளாய், அயலானொருவன் தன் காதலனாக, அவன் பின்னே, தன்னடியின் கீழேயே தன் நிழல் மறையக் கூடிய நண்பகலில் மிக்க அனல் வீசும் பாலைவனத்திடையே, கொடுந்தொழில் புரியும் o தறு கண்மை வாய்ந்த வேடுவர் கொட்டுந் துடியோசைக்கு அஞ்சி, மெய் நடுக்குற்று, ஈந்தும் இலவமும் விளாவும் நெருங்கி வளர்ந்துள்ள வெளியிடையில் அமைந்ததும், வேட்டை நாய்களைப் பிணித்த கயிற்றால் அரிக்கப்பட்ட கம்பத்தின் மேலிடமாக மரைமான்களின் உரிதோலைக் கூரையாக வேய்ந்து அதன் மயிர்களால் மூடப்பெற்றது. மான சிறுகுடிசையிலே, விரித்த நரைக் கூந்தலினையும் வெளுத்த வாயினையும் உடைய மறவர் குடி மங்கையர்க்கு. விருந்தாயினள் போலும் என்று செவிலித்தாய் சிந்தை உருகிச் செயலற்றுக் கூறினள். : * o