பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/663

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 பின் வரும் அகப்பாடற் பகுதி இக் கருத்தினை உள்ளடக்கியுள்ளது: “............... ... அத்தம் கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச் சேக்குவள் கொல்லோ தானே தேக்கின் அகலிலை கவித்த புதல்போற் குரம்பை ஊன் புழுக் கயரு முன்பிற் கான்கெழு வாழ்வர் சிறுகுடி யானே.' அடுத்த பாடல் (14) செவிலிக்குத் தோழி கூறியதாக அமைந்துள்ளது. 'தன் காதலனான தலைவன் பின்னே உடன்போக்கு

வலித்த நெஞ்சோடு உடன் சென்ற தலைவி காலாலே நடந்து சென்று, பகைவர் திரிபுரங்களை உடன்றெரித்த மேருமலையை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் கொண்ட சிவனுக்குரிய திருவாரூர் சூழ்ந்த பகுதியினை இனிது அடைந்தவளாகுக என்று தோழி குறிப்பிட்டாள். அடுத்த பாடல் (15) உடன்போக்கு நேர்ந்தவிடத்துச் செவிலித்தாய் இரங்கிக் கூறியதாக அமைந்துள்ளது. - சிவபிரானது சடையின் குளிர்ந்த மதி போன்ற முகத்தினளாம் என் மகள், ஒரு படுக்கையில் 677 வலப்பக்கமாக அணைந்து .ெ கா ண் டு துயிலுங்கால் அவ்வணைப்புப் பிரிந்து இடப்பக்கமாக நான் திரும்பினும் அஞ்சக் கூடியவளாவள். அத்தகு மெல்லியள் இப்போது தலைவன் துணையாகப் பெரும் கடத்தினைக் கடந்து சென்றனளே! அவண் நேரக்கூடிய துன்பங்கள் அவளால் பொறுத்தற் கரியவன வல்லவே! என்று செவிலி சோர்ந்து கூறினாள். - ஒருவாத புகழுடைய திருவாதவூரராம் மணிவாசகப் பெருந்தகையும், 21. அகநானூறு: 315.