பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

669 தழுவின கையிறை சோரிற் றமியமென் றேதளர்வுற்று அழுவினை செய்யும் ............... பேதை'.2 - என்று திருக்கோவையாரிற் குறிப்பிடும் கருத்து இதனோடு ஒப்பு நோக்கற்குரியது. . . . . பதினாறாவது பாடல் மகட்போக்கிய செவிலித்தாய், ஆற்றாமை மீதுாரக் குரவொடும் பிறவொடும் கூறிவருந்திய வரம்பிலாத் துன்பத்தினைப் புலப்படுத்தி நிற்கிறது. - என் செல்ல மகள் கடுவெயில் எரிக்கும் காட்டகத்தே. தன் காதலனுடன் போதலால், அவளது கண்ணழகிற்கு ஆற்றாது தோற்றமை பற்றி உண்டான நெஞ்செரிவோடு அங்கு வசிக்கும் மானினம் அவள் செலவினைத் தடுக்காமற் செல்ல விடுவனவாகுக. அவள் கொங்கை யெழிலுக்குத் தோற்றுக் குன்றை யடைந்த கோங்கமும், அவள் உடன்போக்கிற்கு ஒருப்பட்டு நடக்கும் செலவிற்கு உடன்படுக. அவள் வளவிய தோளுக்கு உடைந்து வெயி லிடை நிற்கும் வேய்களும் அவ்வெயில் முனிதல் காரணமாகக் கூற்றின் வாய்ப்பட்டு ஒழிக. எம் சிவன் முடிக்கண்ணியாக அணிந்த குரவமே! அரிய பெரிய கடத்திடை நின்று நாள் தோறும் ஆயிரம் பாவைகளை வளர்ப்போய்! உனக்கு. மிகவும் அணியளாக வரும் என் பாவையைத் தடை செய்யாமல், அக்குற்றத்தினின்று நீங்கினையாவாய்!" இவ்வாறு செவிலி சிந்தை நொந்து பாலை மரங்களுள் ஒன்றான-பாவை போன்று பூப்பூக்கும் குராமரத்தினை நோக்கிக் கவன்று கூறினாள். இக் குராமலர் சிவபிரான் உகந்த மலரென்பது,

  • குரவ நாண்மலர் கொண்டடியார் வழிபாடு செய்

விரவி நீறணிவார் 28 - என்னும் தேவாரத்தால் விளக்கமுறும். 22. திருச்சிற்றம்பலக் கோவையார்; நற்றாய்க் குரைத்தல் : 229. - - 23. திருஞானசம்பந்தர் தேவாரம்; இரண்டாம் திரு. முறை: திருவையாறு: 8. o