பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 eeAA S ee SGAA SAAAAA SAAAAA AAAASSSS S S ... அடுத்த பாடலும் (17) செவிலி கூற்றாய் வந்துள்ளது. குரவமலர் மணக்குங் கூந்தலை யுடைய என் மகள் ! மாலையணிந்த வேலோன் பின் சென்ற கடுமை நிறைந்த கானம், சிவன் காமவேளைக் கடைக்கண்ணால் எரித்த நெருப்பினும் நனி கொடுமை வாய்ந்தது என்று செவிலி கூ றினாள். அடுத்த பாடலும் (18) அதே கருத்திலேயே அமைந் துள்ளது. " . - . . . . ; கொன்றை, திங்கள், அரவு முதலிய மூன்றனையும் முடிமலராகவும் பெருத்த செவ்வானம் போலும் விரிந்த திருமேனியையும் கொண்ட முக்கண்ணனாம் சிவனை வணங்கித் துதியாதார் வறுமையால் வெயிலில் வருந்தி யலைவது போல, என் அருமை சான்ற மகளும் பாலை நிலத்தை நடந்து கடந்து சென்றனள் என்று செவிலி இரங்கிக் கூறினாள். . . . . . . . . அகவலில் அமைந்துள்ள அடுத்த பாடல் (19) வாயில் வேண்டி வந்த பாணனொடு தோழி வெகுண்டு. கூறியதாக அமைந்துள்ளது. . . . தலைவனுடைய பார்வை விலங்கு போலவும், இளைய மகளிரை அகப்படுத்தும் வலைபோலத் தோன்றியும், உள்ளத்து நிகழ்வதை வெளிப்படுத்தாது கள்ளத்துடன் மறைத்துப் பொய் கலந்த சொற்களால் எம்மைப் பலவாறு மிகைப்படப் பாராட்டியும்; கள்ள நோக்குடன் எம்மைக் கைதொழுது பணிந்தும், எம் மனைக்கண் வந்துள்ள பாணனே! நீ பாராட்டெடுத்த தலைவனோவெனில் இம் மருங்கு வாராமல் இனியமொழி கூறும் பரத்தையர் வலைப்பட்டு அவர் வசமாகிக் கண்ணாடி யனைய தன்மையினனாய் உள்ளான் என்று தோழி பாணனை வெகுண்டுரைத்தாள். -