பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

671, கண்ணாடித் தன்மையினன் என்று தலைவனைத் தோழி கடிந்துரைத்த குறிப்பானது பின்வரும் குறுந் தொகைப் பாடலொன்றன் கருத்தினைத் தழுவியதாகும்: கையுங் காலுந் துாக்கத் தூக்கும் , ஆடிப் பாவை போல : மேவன செய்யும்.........' அடுத்த பாடலும் (20). இதே கருத்தினைவே கொண்டுள்ளது. 'ப்ாண்ன்ே பூந்தண் புனலூரன் பொய்ம்மொழி களைப் பால் போலும் இனிய சொற்களைப் பேசும் பரத்தையரிடமே சென்று சொல்லுக; ஏற்றுக்கொள்ள எவ்வாற்றானும் இ ய ல ள த. அப்பொய்ம்மொழிகளை எதன் பொருட்டு எம்மிடம் கட்டியுரைக்கிறாய்? என்று. தோழி பாணனைப் பார்த்துச் சீற்றத்துடன் மொழிந்தாள். அடுத்து, கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள பாடல் (21) தலைவியின் கூற்றாக வருவதாகும். இப் பாடல் அணைந்தவழி யூடல்' என்னும் துறையைச் சார்ந்தது. அதாவது தோழியால் ஊடல் தணிவிக்கப் பெற்றுப் பள்ளியிடத்தாளாகிய தலைவி, ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவனோடு புலந்து கூறியதாம். ஐயா, யான் இரங்கும் வண்ணம் நீவிர் என் காலடி களைத் தொட்டுப் பணிய வேண்டா என்மேனியை அணைக்க வேண்டா என் ஆடையை இழுத்து அலைக்க வேண்டா; இத்தகு சாகசங்களை நீங்கள் நன்கு கற்று இவ்விடம் வந்துள்ளிர் போலும் உம்முடைய செய்கைகள் மிகவும் நன்றாக விருக்கின்றன. விழிக்கண் மையூசி மையல் எழுப்பும் நம் சேரிப் பெண்டிராம் பரத்தையர் இவற்றைக் கேட்பராயின், உமக்குப் பொல்லாங்கு வந்து சேரும்! ー・ o 24. குறுந்தொகை: 8.