பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 தலைவியின் அடிதொட்டு வணங்கல் என்பது ஊடற். காலத்துத் தலைவியின் வெகுளி தணித்தற்பொருட்டு தலைவன் ஆற்றும் செயலாம். - -

  • மனைவி யுயர்வும் கிழவோன் பணிவும்

கினையுங் காலைப் புலவியுள் உரிய.' பரத்தைமாட்டுப் பிரிந்து மீட்டும் தன்னிடம் வரும் தலைவனிடத்துத் தலைவி, - * -

  • நின் சேயிழையார் நலஞ்செய்த

புல்லங்கள் மாட்டேம் தொடல்விழு கற்கலையே' என்றும், -

  • கால்தான் தொடல் தொடரேல் விடு

திண்டல் எங் கைத்தலமே' என்றும் கூறுவதாகத் திருக்கோவையார் மொழியும். இருபத்திரண்டாம் பாடல் தலைவி கூற்றாக அமைந்: துள்ளது. அகவலில் அமைந்துள்ள இப் பாடல் பரத்தையிற் பிரிந்த தலைவனை நினைந்து தலைவி வருந்துவதாக அமைந்துள்ளது. தன் நெஞ்சொடு தலைவி பேசுவதாக அமைந்துள்ள இப் பாடலின் கருத்து வருமாறு: - நெஞ்சே! கிண்கிணி ஒலிக்கவும், சிறுபறையைக் கையிற் பற்றியும், சிறுதேர் உருட்டியும், புழுதியளைந்தும், இளஞ் சிறாரொடு தளர்நடை பயிற்றியும், அக்குமணிகளை அரையிற் கட்டியும், ஐம்படைத்தாலி அணிந்தும் என் பக் கத்தில் இருக்கும் என் இளஞ்செல்வனை நினைத்தவளவிற். ੋ தொல்காப்பியம்; பொருளதிகாரம்; பொரு ளியல் : 33. - 26. திருச்சிற்றம்பலக் கோவையார் ; பள்ளியிடத்து ஊடல் : 358. - 27 திருச்சிற்றம்பலக் கோவையார்; அணைந்த வழி ஊடல் : 390. - . . .