பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/668

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

673 சுரக்கும் தீம்பாலையுடைய என் மார்பகங்களைத் தழுவும் விருப்பமின்றிப் பிரிந்த தலைவரின் பூண் அணிந்த மார்பினைப் புல்லுவன் என்று என்னைவிட்டு நீ அவரிடம் சென்றமையால், பெரிதும் மடமைக் குணம் உடையை ஆயினை என்று தலைவி நெஞ்சொடு புலந்து வருந்தினாள். இப்பாட்டில் குழந்தையின் இனிய தோற்றமும் செயலும் நெஞ்சையள்ளும் வகையில் வருணிக்கப்பட் டுள்ளன. பின்வரும் பாடற்பகுதி அழகான குழந்தைச் சித்திரம் எனலாம்: ** * * - - -

  • அழகுடைக் கிண்கிணி யடிமிசை யரற்றத் தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேரீர்த் தொருகளி றுருட்டி யொண்பொடி யாடிப் பொரு களி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்து பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி அக்கரை யுடுத்தி யைம்படை கட்டி ஒக்கலை யிருக்கு மொளிர்புன் குஞ்சிக் குதலையங் கிளவிப் புதல்வன் 49 அடுத்த பாடல் (23), பிரிவிடையாற்றாத தலைவி தன் நெஞ்சினை நோக்கிக் கூறியதாக அமைந்துள்ளது.

நெஞ்சமே! தீயரங்கத்தில் ஆடும் ஈசனது திருத்தோள் களிடம் அன்பு அமைத்த திருத்தொண்டினைச் செவ்விதின் ஆற்றும் தலைவனிடத்துச் செல்வாயாக. தலைவனைப் பிரிந்து நீ இங்கிருந்து என்ன பயன்?" - அடுத்த பாடல் (24) தோழி கூற்றாக அமைந்துள்ளது. பரத்தையிற் பிரிந்து தலைவியிடத்து வந்த தலைவனைப் பார்த்துத் தோழி கூறுவதாக அமைந்துள்ளது. வீரஞ்சான்ற வேலினையுடையோய் சின்மொழி யையும் பவளவாயினையுமுடைய எங்கையர்க்கே (பரத்தை யர்க்கே) நீவிர் அருள்புரிவீராக. நீர் நிறைந்த குளத்தில் պա 28. திருவாரூர் மும்மனிக் கோவை :22. சே. செ. இ.43 -" - - ---' ' ' '.