பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 பல்லாயிரமாகவுள்ள ஆம்பல் மலர்களிடையே தான் ஒன்றாகத் தாமரை தோன்றுமாயினும், அக்குளம் தாமரைக்குளம் என்றன்றோ வழங்கப்பெறும் என்று திறலாகக் (சமத்காரமாக) கூறினாள் தோழி. நீர் நிறைந்த குளம் இங்கு ஊராகவும், ஆம்பல்கள் பரத்தையராகவும், தாமரை தலைவியுமாகக் கொள்ளப் பட்டன. இதனால், தலைவியுடன் கூடி வாழும் இனிய இல் வாழ்க்கையினையே ஊரார் சிறப்பித்துப் பேசுவரேயன்றி, பரத்தையிற் பிரிந்து வாழும் பயனற்ற வாழ்க்கையை ஒரு போதும் மதியார் என்ற அரிய கருத்து பெறப்பட்டது.

  • துறைமலி யாம்பல் பல் லாயிரத்

துத்தமி யேயெழினும் நறைமலி தாமரை தன்னதன்

  • றோசொல்லு நற்கயமே என்ற பகுதியில் சீரிய நற்கருத்துத் துலங்கக் காணலாம். தலைவன் சிறைப்புறத்தானாக நிற்க, தோழி அலர் நீங்க விரைவில் தலைவியை வரைந்து கொள்ளவேண்டும் எனக்கூறுவதாக இருபத்தைந்தாம் பாடல் அமைந்துள்ளது. தண்ணந்துறைவனான த ைல வ னது தடவரை போலும் பரந்த மார்பினைக் கண்டது முதலாக, திருவாரூரில் விழா நடக்கும் காலத்து எழுந்த ஆரவாரம் போன்ற பேரலர் இச்சிற்றுாரில் எழுவதாயிற்று என்று தோழி கூறினாள். - -

இருபத்தாறாம் பாடல் அல்ல.குறியறிவிக்கும் கருத் தமைந்த பாடலாகத் தோழி கூற்றாக வந்துள்ளது. அல்ல குறியறிவித்தல் என்னும் துறை, தலைவன் சிறைப்புறமாக வந்து நிற்ப அவன் கேட்கும் வண்ணம், முதல் நாளிரவில் குறியல்லாத குறிக்கட்ெ சன்று தலைவ 29. திருவாரூர் மும்ம ணிக்கோவை; 24 : 3-4. -