பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/670

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

675 னைக் காணாது தாம்வறிதே மீள நேர்ந்ததனைத் தோழி புட்களின் மேல் வைத்துக் கூறுதலாம். ! . . ." 'ஊரெல்லாம் துயின்றும், உலகு ஒலியடங்கியும், மக்கள் தொழில் மடங்கியும் உள்ள செறிந்திருள் பரவிய நள்ளிரவில், திருமறைக்காட்டு நீர்த் துறையிடமாக அன்னம் முதலாய பறவைகள் இரைமேய்ந்து உறங்கா வாயின : - - இதன் கருத்து, வேற்றுப் புட்களின் வரவு, மக்கள் வரவோசை, பழங்கள் முதிர்ந்து நீர்நிலைகளில் விழுந்து ஒலி யெழுப்புதல் முதலிய நிகழ்ச்சிகள் காரணமாகப் புட்கள் ஆரவாரித்தமையால் அத் தடை காரணமாகத் தலைவி இரவுக்குறிக்கண் வந்து சேரும் வாய்ப்புப் பெற்றிலள் என்பதாகும். பொன்னங் கலர் புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் - புற்று முற்றும் அன்னம் புலரு மளவுங் துயிலா தழுங்கினவே என வரூஉம் திருக்கோவையார்ப் பாடற்பகுதியும் இக் கருத்தினையே புகல்வதாகும். - இருபத்தேழாவது பாடல் தலைவனது தேர்வரவினைத் தலைவிக்கு உணர்த்தும் தோழியின் கூற்றாக அமைந் துள்ளது. 'இராக்காலம் இறுமாந்து செருக்குற்றது போல மிகுந்து, புட்களும் பேய்களும் துயில் மடிந்து நின்ற இப் பனி நாளில் நள்ளிருளிடையே, சிவபெருமானைச் சிந்தை யாரத் தொழும் அடியார் மனம் போல நம் உள்ளம் உருகும்படி ஒப்பற்ற நம் தலைவர் பூண்ட தேர் இங்கு வந்து உலவுகின்றது." - இப்பாடலால் ஈசனைத் தொழும் அடியார் மனத்தின் உள்ளமுருகும் தன்மையும், தலைவன் தேர்வரவினை 30. திருச்சிற்றம்பலக் கோவையார் அல்ல குறியறி வித்தல் : 172. - -