பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/671

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 ஆவலோடும் நம்பிக்கையோடும் எதிர்நோக்கி நின்ற தலைவி, தோழி இவர்தம் ஆர்வமும் புலனாகக் காணலாம். இருபத்தெட்டாவது பாடல் அகவலில் அமைந் துள்ளது; தலைவியின் கூற்றாக வருகின்றது. தன் ஆயத்திடையே விருந்தினனாகப் புக்க தலைவனால் தான் அடைந்த வேறுபாட்டைத் தோழியிடம் தலைவி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிவபெருமானது திருவாரூரில் ஒரு நாள் நண்பகலில் என் ஆயத்துடன் கூடி, வலம்புரிச் சங்கை அடுப்பாகக் கொண்டு, முத்துக்களாகிய அரிசியைச் சலஞ்சலம் என்ற கலம் நிறையப் பெய்து ஏற்றி, பவளமாகிய செந்தீயை மூட்டி, அழகிய இப்பியாகிய துடுப்பால் ஒப்பத்துழாவிச் சமைத்த அடா அமுதை - அதாவது மணற்சோற்றை, என் சிறு தோழியர் கூட்டத்துடன் வாய் மடுத்து யான் உண்ணும்போது அங்கு ஒருவன் ஓடி வந்து, என் முலை முகம் நோக்கி முறுவலித்து, தேமொழி நங்காய்! விருந்தினனாகப் புகுந்த எளியேனுக்கும் அமுதம் அளிப்பாயோ' என்று கூறி என்னை இறைஞ்சி நின்றான். அதனால், பொங்கும் நீரில் எண்ணெய்ந் துளிகள் பட்டது போல என் அங்கமெல்லாம் அவ்விருந்தினனே ஆயினன்" என்று தலைவி பண்டு நிகழ்ந்த நிகழ்ச்சியினைச் சொற்று இன்புற்றாள். நீரிற்பட்ட எண்ணெய்த் துளிகள் அந்நீர் முழுதும் பரவி வேறுபடுத்தல் போலத் தலைவன் தன்னைக் கண்ட காட்சி, தன்னை முற்றும் வேறுபடுத்தியது என்று தலைவி காட்டும் உவமை, நயம் செறிந்ததாகும்: நறைகம ழெண்ணைய்ச் சிறுநுண்டுள்ளி பொங்குபுன லுற்றது போலவென் அங்க மெல்லாந் தானா யினனே." 31. திருவாரூர் மும்மணிக் கோவை: 28.