பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

677 மேலும் இப்பாடல், புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்' என்றபடி தலைவி தோழிக்குக் கூறியதன்பாற்படும். தன்னை இடித்துக் கழறிய பாங்கனுக்குத் தலைவன் மறுமொழி கூறுவதாக இருபத்தொன்பதாவது பாடல் அமைந்துள்ளது. 'திருவாரூர் மடப்பாவையாம் என் தலைவியின் கொங்கைத் தடத்தில் விருப்புற்றுப் பெருகிய என் அன்பினை இனி யாரே நீக்க வல்லவர்?’ என்று தலைவன் தன் காதன் மிகுதியினைத் தன் பாங்கனுக்கு உணர்த்திய வாறாம். இறுதிப் பாடலாகிய முப்பதாவது பாடல் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளது; தலைவியின் கூற்றாக வந்துள்ளது. தலைவனின் பிரிவாற்றாது கையாறு எய்திட்ட தலைவி கடலொடு வருந்திக் கூறுவதாக இறுதிப்பாடல் அமைந்துள்ளது.

திருவாரூர்ப் பெருமானது திருவடிகளைப் பணியாது பிறவிக்கடலில் ஆழ்ந்து கிடந்து நைந்துருகும் மக்களைப் போல வருந்தும் என்பால் இரக்கமுற்று, சூழ்ந்துள்ள தன் கரைமேல் அலையாகிய தன் கைகளால் அடித்துக் கொண்டும், வீழ்ந்தும், கிடந்தும், அலறியும் இக்கடல் எப்பொழுதும் என்போல் துயிலாதாயிற்று' என்று தலைவி தன் தண்டாத துன்பத்தினைப் புலப்படுத்தினாள்.

கடலிற்கு என்பால் அமைந்துள்ள இரக்கம் தலைவர்க்கு என்பால் அமைந்தில்லையே என்ற கூற்றில் தலைவியின் ஆற்றாமை நன்கு புலப்படும். 32. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; 3 يليHT ; ," வியல் : 16. * =