பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 உவமைகள் திருவாரூர் மும்மணிக் கோவையில் வந்துள்ள உவமை களைக் காண்போம்: (1) ......... ----------........ கங்கை வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள் அரிவை பாகத் தண்ண லாரூர் எல்லையி லிரும்பலி சொரியும் கல்லோ சென்ற காதலர் மனமே. (1) இப் பாடலில் கங்கை வெள்ளத்தைக் கட்டுப்படுத்திய நீண்ட சடையை உடைய வரும் உமா தேவியை இடப்பாக மாகக் கொண்டிலங்கும் கடவுளருமாகிய ஈசன் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருவாரூரின் எல்லையில் அமைந்துள்ள பலிபீடக் கல் போன்று பிரிந்து சென்ற காதலர் மனம் வன்மையாய் உளது என்று தோழி குறிப் பிட்டாள். தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவன் தலைவியை நினைந்து திரும்பி வாராததால் தோழி தலைவனின் மனத்திற்குத் திருவாரூரின் எல்லையின்கண் அமைந்துள்ள பலிபீடக்கல்லை உவமை கூறினாள். (2) கண்ணார் நுதலெங்தை காமரு கண்ட மென விருண்ட விண்ணா லுருமொடு மேலது கீழது கொண்டல். (3) இப்பாட்டில், இடியுடன் கூடிக் கருத்தெழுந்து முழங்கும் மேகத்தின் கருமை, ஈசனின் கருத்த கழுத்தின் இருளுக்கு உவமை கூறப்பட்டுள்ளது. (3) யானே இன்னே அலகி லாற்ற லருச்சுனற் கஞ்ஞாண். றுலவா நல்வர மருளிய வுத்தமன் அந்த ணாரூர் சிந்தித்து மகிழா மயரிய மாக்களைப் போலத் - துயிருழந் தழியக் கண்டுயி லாவே...' (4)