பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.79 இதன் பொருள், யானோ அளவற்ற ஆற்றலுடைய அருச்சுனனுக்கு அந்நாளில் சிறந்த நல்வரமாகிய பாசு பதத்தினை யளித்த திருவருர் சிவபிரானைச் சிந்தித்து மகிழாது அறிவு கலங்கிய மாக்களைப் போலத் துயர் மேம்பட்டு உழந்தழிதலால், கண்கள் துயில் பெறாவாயின." என்பதாம். இவ் வுவமை சிவன் சேவடி தைவரு நெஞ்சச் சிறப்பினை யுணர்த்தி நிற்றல் காண்க. (4) “... ......... அந்திங்கட் கண்ணியான் கண்டத்துக் கொப்பாய கார்' (5) முன்பே வந்துள்ள உவமையே இது. இறைவன் கழுத்தின் கறுப்பு கார்மேகக் கறுப்புடன் ஒப்பிடப் பட்டுள்ளது. (5) “........................... துன்னருகஞ் சாரு மிடற்றண்ண லாரூ ரனைய வணங் கினுக்கே. (6) திருவாரூர் போன்று அழகுடைய தலைவி என்று இப் பாட்டில் தலைவி குறிக்கப்பெற்றுள்ளாள். தலைவியின் அழகுக்கு இவ்வாறு அக்காலத்துப் புகழ் பூத்து நின்ற நகரங்களை உவமை கூறுவது வழக்கு என்பதனைச் சங்க இலக்கியங் கொண்டு தெளியலாம். (6) அல்லியங் கோதை யழலுற் றாஅங் கெல்லையி லிருந்துய ரெய்தினள்.' (7) திருமகள் அழுவது போல எல்லையற்ற பெருந் துயரினைத் தலைவி எய்தினள். (7) கொடியேர் நுடங்கிடையாள்' (14) கொடிபோன்ற நுண்ணிய இடை என்று தலைவியின் இடை வருணிக்கப்பட்டுள்ளது.