பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 (8) குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின் விரவுங் கடுங்கானம் வெவ்வா-யரனுஞ் சடைக்கணிந்த சங்கரன் றார்மதனன் றன்னைக் கடைக்கணித்த தீயிற் கடிது.' (17) 'குரவமலர் மணக்குங் கூந்தலையுடைய என் மகள் மாலை சூடிய வேலோன் பின் சென்ற கடுமை நிறைந்த காடு, சிவன் காமவேளைக் கடைக்கண்ணால் எரித்த தீயினும் கொடுமை வாய்ந்தது என்று செவிலி தலைவி உடன்போக்கு ஒருப்பட்டுத் தலைவன் பின் சென்ற கானத்தின் கடுமையைக் குறிப்பிட்டாள். (9) “.....-------..................... முக்கணக் கன்மிக்க செக்கரொக்கும் படிமலர் மேனிப் பரம னடிபர வாதவர் போல் அடிமலர் நோவ நடந்தோ கடந்ததெம் மம்மனையே " (18) 『 。 பெரிதாகிய செவ்வானம் போன்று விரிந்த திரு மேனியை யுடையவனாகிய ஈசனை வணங்கித் துதியாதார் வறுமை வாய்ப்பட்டு வெயிலில் வருந்தியலைந்து திரிவது போல, என் அருமை மகளும் கொடிய பாலைநிலத்தைக் கடந்து சென்றனள் என்று செவிலி இடைச்சுரத்தில் தலைவி பட்ட துன்பத்தை நினைத்து நவின்றாள். இவ்வுவமையால் இறைவழிபாட்டின் சிறப்பு வற்புறுத் தப்படுகின்றது. (10) பொய்யார் தொழினு மருளு மிறைகண்டம் போலிருண்ட மையார் தடங்கண் மடங்தையர்' (21) 'பொய்ம்மை நெஞ்சத்தவர் தொழுதாலும் அருளும் சிவபெருமானுடைய கறுத்த கழுத்துப் போலும் இருண்ட