பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

681 மைதீட்டிய விசாலமான கண்களையுடைய பெண்கள்" என்று இவ்வுவமை குறிப்பிடுகின்றது. எவர் தொழுதாலும் இறைவன் எளியனாய் வந்து அருள் புரிவான் என்பதனை இப்பகுதி விளங்க உரைக் கின்றது. (11) அண்ண லாரூர் திண்ணி திற் செய்த சிறைகெழு செழும்புனல் போல நிறையொடு நீங்கா நெஞ்சம் நீயே.' (22)

  • மண்ணணைத்த கரைக்குள் அடங்கும் நீர் போல நிறையென்னும் நற் பண்பால் அடைக்கப்பட்ட நெஞ்சம்'

என்பது இப்பகுதியால் - இவ்வுவமையால் பெறப்பட்ட கருத்தாகும். (12) தண்ணங் துறைவன் தடவரை யகலங் கண்ணுறக் கண்டது முதலா வொண்ணிறக் காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக் கோளிழைத் திருக்குங் கொள்கை போல மணிதிகழ் மிடற்று வானவன் மருவும் அணிதிக ழகலத் தண்ண லாரூர் ஆர்கலி விழவி னன்னதோர் பேரலர் சிறந்தது சிறுகல் லூரே.' (25) கரும்பாம்பாகிய கேது பிறையைக் கவ்வியது போலக் கருநிறங் கொண்ட கழுத்தினையுடையவன் திருவாரூர் ஈசன் என்பது முதலாவது வரும் உவமையாகும். அடுத்து, தண்ணந் துறைவனான தலைவனது தடவரை போலும் மார்பினைக் கண்டது முதலாக, திருவாரூரில் திருவிழா நடைபெறுங்காலையில் எழுகின்ற பேராரவாரமே போன்ற பேரலர் தலைவியின் சிற்றுாரில் எழுவதாயிற்று.