பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

€83 (15) தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் றாள்பணியா தாழ்ந்து கிடந்துகை வார்கிளை போலயர் வேற்கிரங்கி (30). "தாழ்ந்த சடைமுடி கொண்ட சங்கரன் திருவடிகளைப் பணியாது பிற விக் கடலில் அழுந்திக் கிடந்து இளைத்து நிற்பவர் போல வருந்தும் என்பால் இரக்கங் காட்டி" என்று இவ்வுவமை மேற் செல்கின்றது. இவ்வுவமையால் ஈசனது திருவடிகளை நினையாதார் நெஞ்சம் பி ற வி ப் பெருங்கடலை நீந்துவதில்லாமல் துயருறும் என்ற அரிய கருத்துப் பெறப்படுகின்றது. தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக் கவலை மாற்ற லரிது: என்ற குறளும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்: என்ற குறளும் இவ்வுவமைக் கருத்திற்கு அரண் கோலுவன வாகும். இவ்வுவமை சேரமான் பெருமாள் நாயனாரின் கடவுட் பற்றினையும் வாழ்க்கைத் தெளிவினையும் வகையுறக் காட்டி நிற்கின்றது. இயற்கை வருணனை முதற் பாடலில் கார்ப் பருவ வருணனை கவினுற. அமைந்துள்ளது. சூல் கொண்ட கருமேகம் மலை முகட்டில் ஏறி மழை. பொழிந்தது; மின்னல் மின்னியது; வானவில் இட்டது;. 33. திருக்குறள்; கடவுள் வாழ்த்து : 7. 34. # 5. 10.