பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/679

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 இந்திர கோபம் ஊர்ந்தது; காந்தள் மலர்ந்தது; முல்லைப் ஆக்கள் அரும்பின; கொன்றை பூத்தது; மயில் தோகை விரித்து ஆடியது; ஊதைக் காற்று வீசியது. இவ்வாறு கார்ப் பருவ வரவு கிளத்தப்பட்டுள்ளது. நான்காவது பாட்டும் கார் கால வருணனையாகவே அமைந்துள்ளது. கார் வானம், உறை கழித்த ஒள்வாள் போல மின்னிற்று; இடியெனும் அதிர்குரல் முரசமியம்பி ஆர்த்தது; வானவில்லை வளைத்து, மழைத்துளிகளைக் கணைகளாகப் பொழிந்தது. களா, வெண்காந்தள், செங் காந்தள், காயா என்ற மரங்கள் மலர்ந்து இந்திர கோபத் துடன் தலைவனைப் பிரிந்துறையும் தலைவிக்குப் பெருந் துயர் விளைவித்தன. இவ்வாறு இம் மும்மணிக்கோவைப் பாடல்கள் இயற்கை வருணனையும், காதல் வாழ்வும், உவமை நலமும், உயரிய கருத்துகளும் குறைவறக் கொண்டு மிளிர் கின்றன. இறைவனிடத்து இடையறாத அன்பு கொண் டவர் சேரமான் பெருமாள் நாயனார் என்பது ஒவ்வொரு பாடலின் வழியும் புலனாகின்றன. சங்க இலக்கியப் பாடல்களின் செறிவு இப் பாடல்களில் நிறைந்திலங்கக் காணலாம்.