பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருக்கைலாய ஞானவுலா தமிழிலக்கியப் பேரியாறு காலத்திற்கேற்பப் புதுப் புதுக்கோலம் புனைந்து, வற்றாது, வளமாக ஒடிக்கொண் டிருக்கின்றது. காலத்தின் இடையிடையே தோன்றிய தமிழ்ப் புலவர் பெருமக்கள் தங்கள் சீரிய கற்பனை யினின்றும் விழுமிய கருத்தினின்றும் எழுந்த எண்ணற்ற இலக்கிய முயற்சிகளை நம்மிடையே அழியாக் கருவூலங் களாக விட்டு மறைந்துள்ளனர். இயற்கையின் பின்னணியில் துலங்கிய மனித வாழ்வினைச் சங்க இலக்கியங்கள் திட்பமுற எடுத்துக்கூறின. மக்களின் நீங்காத சமயவுணர்வினை இடைக்கால இலக்கியங்கள் கொண்டிலங்கின. இவ் இடைக் காலத்திலேயே தமிழ் மொழி இலக்கிய வரலாற்றில் சிறு பிரபந்தங்கள் என்று குறிப்பிடப் பெறும் உலா, கோவை, பள்ளு, பரணி, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், சதகம் முதலான இலக்கியங்கள் தோன்றின. செஞ்சொற். கவியின்பம்" என்று கம்பர் குறிப்பிடுவது போன்று சொன்னயத்தாலும் பொருட் சிறப்பாலும் கற்பனை வளத் தாலும் இச் சிற்றிலக்கியங்கள் சிறந்து விளங்கின. தமிழ் மொழியின் தொன்னூலாசிரியராம் தொல்காப் பியனார் பிற்காலத்தெழுந்த இச் சிற்றிலக்கிய வகைகளுக்கு எல்லாம் தம் தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத். திணையியலின்கண் இடம் வைத்துள்ளார் என்பதனை உணர்தல் இன்றியமையாததாகும். விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே! 1. தொல்காப்பியம் : பொருளதிகாரம், செய்யுளியல் நூற்பா : 23.