பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 என்ற நூற்பா அனைத்துவகைச் சிற்றிலக்கியங்கட்கும் வித்திட்டுள்ளது என்று அறிஞர் கூறுவர். இந்நூற்பாவிற்கு உரை எழுதிய பேராசிரியர் புதுவது கிளந்த யாப்பின்மேற் றென்னையெனின், புதிதாகத் தாம் வரவேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்து வரச்செய்வது; அது, முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க; கலம்பகம் முதலாயினவும் சொல்லுப' எனக் குறிப்பிட்டுள்ளமை காண்க. எனவே தொல்காப்பியனார் விருந்து என்ற வாற்றால் அனைத்துவகைப் புத்திலக்கியங்கட்கும் இடம் வைத்திருப்பது அவர் தம் எதிர தாக் காக்கும் கூரிய சீரிய மதி நல மாண்பை நுவலா நிற்கும். மேலும் தொல்காப்பியத்தில், குழவி மருங்கினும் கிழவ தாகும்’ ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான' என வரும் நூற்பாக்கள், சிறப்பாகப் பிள்ளைத்தமிழ், உலா முதலான சிற்றிலக்கிய வகைகட்குக் கருவாய் அமைந்துள்ள தனைக் காணலாம். இந் நூற்பாவிற்கு இளம்பூரணர் - ஊரின்கண் காமப் பகுதி நிகழ்தலும் உரித்து என்று சொல்லுவர் புலவர்; அது நிகழுங்காலத்து வழக்கொடு பொருந்தி நடக்கும் வகைமையின்கண்' என்று பொருள் கண்டுள்ளார். மேலும் ஊரொடு தோற்றமும் என்பது பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வருவது; வழக்கு" என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை; வகை என்பது 2. தொல்காப்பியம் : பொருளதிகாரம்; பேராசிரியர் உ ை . 3. தொல்காப்பியம் : பொருளதிகாரம்; புறத்திணை யியல் நூற்பா : 24. 4. தொல்காப்பியம் : பொருளதிகாரம்; புறத்திணை யியல் நூற்பா : 25.