பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/682

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

687 அவரவர் பருவத்திற்கு ஏற்பக் கூறும் வகைச் செய்யுள் என்றும் விளக்கங் கூறியுள்ளமை இடைக்காலத் தெழுந்த உலாக்களுக்கு இலக்கணமாக அமைந்துள்ள செய்தியினை அறியலாம். இளம்பூரணருக்குக் காலத்தாற் பிற்பட்ட உரையாசிரி யராகிய நச்சினார்க்கினியர் மேற்கண்ட நூற்பாவினையே இரண்டாக்கி, அவற்றுள் முதல் நூற்பாவிற்கு, :பக்கு நின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்திணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர். என்றும், தோற்றமுமென்றது அக்காமம் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை; அது பின்னுள் ளோர் ஏழு பருவமாகப் படுத்துக் கலிவெண்பாட்டால் செய்யும் உலாச் செய்யுளாம் என்றும் விளக்கம் வரைந் துள்ளமை உலா இலக்கியங்கள் தோன்றி வளர்ந்த நிலையினைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆயினும் ஈண்டொரு தடையும் எழுப்பப்பட்டுள்ளது. இளம்பூரணர் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் என்றும், நச்சினார்க்கினியர் கி. பி. பதினான்காம் நூற்றாண்டினர் என்றும் அறிஞர்கள் ஆய்ந்து நிறுவி யுள்ளனர். இளம்பூரணருக்கும் முன்னர் வாழ்ந்தவர் சேரமான் பெருமாள் நாயனார். அவர் இயற்றியருளிய திருக்கைலாய ஞானவுலாவே உலா இலக்கியங்களில் முதலாவதாகும். இதுபோன்றே மூவருலா எழுதிய ஒட்டக்கூத்தர் காலத்திற்குப் பிற்பட்டவர் நச்சினார்க் கினியர். இவ்விரு உரையாசிரியர்களும் தம் காலத்திற்கு முன்னர் எழுந்த இலக்கிய வகைகளைக் கண்டு அவற்றிற் கேற்ப இந் நூற்பாக்களுக்கு உரை கண்டிருக்கலாம் என்றும், 5. தொல்காப்பியம் : பொருளதிகாரம்; புறத்தினை யியல், இளம் பூரணர் உரை. 6. தொல்காப்பியம் : பொருளதிகாரம்; புறத்திணை யியல், நச்சினார்க்கினியர் உர்ை.