பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 ஆதலின் இவர்கள் கூறியுள்ள உரைப்பகுதி பொருந்தாது. என்றும் கூறி இந்நாளில் வேறு உரை விளக்கமும் கூறப் பெறுகின்றது. - வரையறை பிற்காலத்தில் பல்வேறு வகைகளாகக் கிளைத்துத் தழைத்த சிற்றிலக்கியங்களைத் தொண்ணுற்றாறு என்ற எண் வரையறைக்குள் அடக்கிக் கூறும் மரபு தமிழில் எழுந் துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த பிரபந்த மரபியல், -- . - பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாத் தொண்ணுாற்றாறு என்னும் தொகையதாம் என்றும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த பிரபந்த தீபிகை, 7. (அ) இதற்கு இளம்பூரணர் உரையும் சிறவாது; மலை கலங்கினும் நிறைநிலை கலங்காத். தமிழ் மகளிரெல்லாம் ஓர் ஏதிலன் உலாவில் உயிரினும் சிறந்த தம் கற்பிழந்து காமவெறி கொள்ள வைத்துப் பழி பிறங்கும் பிற்காலப் பிரபந்தங்களை அமைப்பதற்கு இப்பொருள் கொண்டார் போலும்;...... இவற்றைப் பிரித்து இ ரு ேவ று நூற்பாக்களாக்கிப் பொருந்தாப் புதுப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர் ... அன்றியும் முதலடிக்கு. இவர் கூறும் புதுப் பொருள், தமிழறமும் பழ. மரபும் அழியவரும் இழுக்காகும். - நாவலர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் புத்துரை. (ஆ) இப் பாடாண் தி .ைண யி ல் உலகியல் - வழக்கத்தை யொட்டித் தலைமக்களுடைய ஊரும் உயர்குடிப் பிறப்பும் இயற்பெயரும் குறித்துப் பாராட்ட்ப் பெறுதலுண்டு. - திரு. க.வெள்ளைவாரணன், தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம்.