பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/684

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

689 பதினாறை யாறாற் பெருக்கி பிரபந்தாதி பலவகை எடுத்துரைக்கின் என்றும் குறிப்பிட்டுள்ளமை கொண்டு சிறுபிரபந்த வகைகள் தொண்ணுற்றாறு என அறிய வருகிறோம். ஆயினும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன் எழுந்த பன்னிரு பாட்டியல் அறுபத்தைந்து சிற்றிலக்கிய வகைகளின் விளக்கமும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய வெண்பாப் பாட்டியல் ஐம்பத்தாறு சிற்றிலக்கிய வகைகள் பற்றிய விளக்கமும், பதினான்காம் நூற்றாண்டில் எழுந்த நவநீதப் பாட்டியல் தொண்ணுாற்றேழு சிற்றிலக்கிய வகைகள் பற்றிய விளக்கமும் கூற, பதினேழாம் நூற் றாண்டின் இறுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த படிக்காசுப் புலவர் சிவத் தெழுந்த பல்லவன் என்னும் வள்ளல் மீது பாடிய சிவந் தெழுந்த பல்லவராயன் உலா, - தொண்ணுற்றாறு கோலப்ரபந்தங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே படிக்காசுப் புலவர் வாழ்ந்த காலத்தை யொட்டியே சிறு பிரபந்தங்கள் தொண்ணுாற்றாறு என்னும் வரையறை எழுந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியிலும் தொண்ணுாற்றாறு இலக்கிய வகைகட்குரிய இலக்கணத் தினைக் காணலாம். ஆயினும் இந்த வரையறை புலவர் பெருமக்களால் ஒருங்கு போற்றப்பட்டதோவெனின் அன்று என விடையிறுக்கலாம். பதினாறாம் நூற்றாண்டின் முற் பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் சிதம்பரப் பாட்டியலில் அறுபத்திரண்டு சிற்றிலக்கிய வகைகளும், பதினேழாம் நூற்றாண்டினதான இலக்கண விளக்கப்பாட்டி யலில் அறுபத்தெட்டு சிற்றிலக்கிய வகைகளும் கூறப்பெற் றிருக்க, சென்ற நூற்றாண்டில் எழுந்த பிரபந்தத் தொகையில் தொண்ணுற்றேழு இலக்கிய வகைகளுக்கு சே. செ. இ.44