பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{590 இலக்கணம் இயம்பப்பட்டிருப்பது கொண்டு, சிற்றிலக்கியங் களை எண் வரையறைக்குள் அடக்கிக் கூறும் மரபு காலத் திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளமையினை அறியலாம். அலங்காரம், சிந்து, சீட்டுக்கவி, ஏசல், புலம்பல், தென் பாங்கு, வண்ணம், வில்பாட்டு முதலான பிற்காலப் புதிய இலக்கியப் படைப்புகள் பல தோன்றி நிலைத்திருப்பதனை யும் காண்கிறோம். எனவே வளர்ந்து வரும் தமிழ் மொழியில் படைப்பிலக்கியங்களை ஒரு வரையறைக்குள் அடக்கிக் கூறும் வழக்கின் பொருத்தமின்மையினைத் தெளி வாக உணரலாம். : உலாவின் தோற்றம் இறைவன் திருவீதிகளில் தமக்குரிய ஊர்திகளில் உலா வந்த சிறப்பினைத் தேவார ஆசிரியர்கள் சிறக்கப் பாடியுள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் பெருமான் தம் காலத்தில் திருவாரூர்த் திருநகரில் தியாகராசப் பெருமானுக்குத் திருவாதிரைத் திருநாளில் நடைபெற்ற திருவிழாவினைக் குறித்துப் பாடியுள்ளார். திருத்தொண்டர் குழாம் புடைசூழத் தியாகப் பெருமான் திருவீதிவுலா வருகின்ற சிறப்புப் பின் வரும் பாடலால் புலனாகின்றது: முடிகள் வணங்கி மூவாதார் கண்முன் செல்ல வடிகொள் வேய்த்தோள் வாணர மங்கையர் பின்செல்லப் பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்." மேலும் அவரே அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாயதும், மன்மதன் எரியுண்டதுமான தலமாகிய திருக்குறுக்கை வீரட்டத்தில் ஏழு நாள்கள் விழா நடந்த தனையும், அத்திருவிழாவில் திருத்தாண்டவக்கோலத் 8. திருநாவுக்கரசர் தேவாரம், 4; 21:18,