பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/686

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு திருக்குறுக்கை வீரட்டனார் திருவீதிகளில் திருவுலாப் போந்த சிறப்பினையும் இனிதே எடுத்துக் கிளத்துகின்றார். அத்தமாம் அயனும் மாலும் அன்றிமற் றொழிந்த தேவர் சோத்தமெம் பெருமானென்று தொழுது தோத் - (திரங்கள் சொல்லத் தீர்த்தமாம் அட்டமி.முன் சீருடை ஏழுநாளும் கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவி ரட்டனரோ.? இறைவன் இடபத்தில் அமர்ந்தருளி வீதியுலாப் போத்த சிறப்பினை, மால் விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்." என்றும் அவர் பிறிதொரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தேவாரத்திலும், தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்' " தேராரும் நெடுவிதித் திருத்தோணிபுரம்' என்றும் வருகின்ற குறிப்புகள் மேலும் இக்கருத்தினை வலியுறுத்தும். காப்பியங்களில் உலா உலாவின் இலக்கியக் கூறுகள் இடைக்காலத் தெழுந்த காப்பியங்களிலும் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். உதயணனின் உலாக் காட்சி பெருங்கதையில் நகர்வலங் கண்டது" என்னும் பகுதியில் கிளத்தப்பட்டுள்ளது. சிந்தாமணிக் காப்பியத்தின் தலைவனாகிய சீவகன் வேடர் கூட்டம் வெளவிச் சென்ற ஆநிரைக் கூட்டத்தை மீட்டு 9. திருநாவுக்கரசர் தேவாரம், 4 ; 50 : 2. 10. திருநாவுக்கரசர் தேவாரம், 6 ; 96 : 7. 11. திருஞானசம்பந்தர் தேவாரம், 1 ; 27 : 7.