பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 வந்தபோது, அந் நகரில் வாழ்ந்த கற்புடை நங்கையர் அவனை வாழ்த்தியதையும், பிற மகளிர் அவன் பொலிவும் வனப்பும் கண்டு களித்து நின்ற காட்சியினையும் திருத்தக்க தேவர் கவினுறக் காட்டியுள்ளார்: இன்னமு தனைய செவ்வா யிளங்கிளி மழலை யஞ்சொற் பொன்னவிர் சுணங்கு பூத்த - பொங்கிள முலையி னார்தம் மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண வோடி அன்னமு மயிலும் போல அணிநகர் வீதி கொண்டார்." அடுத்து, கம்பராமாயணத்தின் உலாவியற் படலம்’ சீதையைத் திருமணங் கொள்ள இராமர் மிதிலைக்குச் செல்லுவதைக் குறிப்பிடுவதோடு உலாச் செய்திகளையுந் திறம்பட மொழிந்துள்ளது. முத்தொள் ளாயிரத்தில் உலாக் காட்சி சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் தம் சிறப்புகளைக் கவினுறக் காட்டி நிற்பது முத்தொள்ளாயிரம் என்னும் நூலாகும். நங்கை யொருத்தி தெருவில் உலா வரும் சோழ மன்னனைக் காண ஆசை மீதுார்ந்து நிற்க, அவனைக் காணவேண்டாவென அவள் தாய் தெருக்கதவைத் தாளிட, இவ்வாறாக இவ் இரு வரிடையே ஏற்படும் மனம், செயற் போராட்டங்களை முத்தொள்ளாயிர ஆசிரியர் நயமுற நவின்றுள்ளார். • திறந்திடுமின் தீயவை பிற்கண்டும் மாதர் o இறந்துபடின் பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன் தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு 13. சீவக சிந்தாமணி : 457.