பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

693 என்னும் பாடல் உலா இலக்கியங்களின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உலாவின் இலக்கணம் தமிழில் எழுந்த பாட்டியல் நூல்கள் பலவாகும். அவற்றிலெல்லாம் உலாவென்னும் சிற்றிலக்கியத்திற்குரிய இலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்தால் முற்பட்ட பாட்டியல் நூல் பன்னிரு பாட்டியலாகும். அந் நூலில், பாட்டுடைத் தலைவ னுலாப்புற வியற்கையும் ஒத்த காமத் தினையாள் வேட்கையும் கலியொலி தழுவிய வெள்ளடி யியலால் திரிபின்றி நடப்பது கலிவெண் பாட்டே' என்று உலாவின் இலக்கணம் விளங்கக் கூறப்பட்டுள்ளது. வச்சணந்திமாலை என்னும் வெண்பாப் பாட்டியல், திறந்தெரிந்த பேதை முதலெழுவர் செய்கை மறந்தயர வந்தான் மறுகென்-றறைந்தகலி வெண்பா வுலாவாங் குழமகன்மேல் மேவிலவ் வெண்பாக் குழமகனா முற்று' என்று இலக்கணம் வரையறுத்துள்ளது. சிதம்பரப் பாட்டியல், குழமகனை அடையாளம் கலிவெண் பாவால் கூறியவன் மறுகணையக் காதல் கூரேழ் எழிற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்று இயன்மங்கை பத்தொன்பான் மடந்தை யையைக் 14. முத்தொள்ளாயிரம் : 85. 15. பன்னிரு பாட்டியல் : 214. 16. வெண்பாப் பாட்டியல் : உலா, குழமகன். – * -o *****ಾರು o

  • ੈ। - * - rಿ

- -