பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 மானின் சிற்றத்திற்கு முன் ஆற்றாது அடிபணிய வேண்டிய காகிவிட்டது. ஆயினும் நிகழ்ந்த போரில் கழுவுள் காட்டிய விரம் பெருஞ்சேரல் இரும்பொறையின் கண் முன் நின்றது. எனவே அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, முன்னர் அவன் இருந்த நிலையினை அவனுக்கு வழங்கி, அவன் தந்த யானைகளையும், அருங்கலன்களையும் திறையாகக் கொண்டு தன் நாடு திரும்பினான். ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து - எட்டாம் பத்து, 1 : 17.18. என்று பதிற்றுப்பத்து பெருஞ்சேரல் இரும்பொறையின் வெற்றியினைக் குறிப்பிடுகின்றது. தகடுரைக் கைப்பற்றி அதியமானை வென்ற செய்தியினை, வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பிற் றகடுர் நூறி -எட்டாம் பத்து, 8 : 8.9. என்ற பதிற்றுப்பத்துப் பாடல் உணர்த்துகின்றது. இப் போரில் எழினி இறந்தான். தகடூர்க் கோட்டை திக்கிரை யாயிற்று. தகடூர் வெற்றி பெருஞ்சேரல் இரும் பொறைக்குத் தகடூர் எறிந்த' என்ற அடைமொழியினைப் பெயர்க்கு முன் தருவதாயிற்று. அஞ்சிக்கு உதவியாகச் சோழனும் பாண்டியனும் போரில் பங்கு கொண்டமை யினால் இப்போர் பெரும் பரபரப்பை உண்டு பண்ணிற்று. சோழ பாண்டியரும் தோல்விக்குட்பட்டனர். இதனை எட்டாம் பத்தின் பதிகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. பல்வேற் றானை யதிக மானோடு இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று முரசுங் குடையுங் கலனுங் கொண்டு உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத் துகள் தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத் -தகடுர் எறிந்து கொச்சிதந் தெய்திய அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை