பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/690

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

695 மானே ரிசைக் கலியின் வெண்பாவினாற்கூறல் வருமுலா வாகுமன்றே29 என்றும் இலக்கணங் கூறுவதனின்றும் நாம் அறிகின்ற செய்திகள் வருமாறு: - தலைவன் வீதியில் உலா வருகையில் அவ் வீதியிலுள்ள பேதை முதல் பேரிளம் பெண் ஈறான ஏழு பருவப் பொது மகளிரும் அவனைக் கண்டு காமுற்றதாகக் கலிவெண்பாவிற் பாடப்படுவது உலா என்னும் சிற்றிலக்கியமாகு மென்று பெறப்படுகின்றது. பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடப்படுதலின் இஃது உலா வெனப் பெயர் பெற்றது. இஃது உலாப் புறமென்றும் வழங்கும். உலாப் புறம் என்னும் இப்பெயர் இலக்கணப் போலியாக வந்தது என்பர் சங்கர நமசிவாயர். இல் முன் என்பதனை முன்றி லென்றும், நகர்ப்புறம் என்பதனைப் புறநகர் என்றும், புறவுலா என்பதனை உலாப்புறம் என்றும், கண்மீ என்பதனை மீகண் என்றும், கோவில் என்பதனைக் கோயிலென்றும், பொதுவில் என்பதனைப் பொதியி லென்றும் வழங்கும் இத் தொடக்கத்தன இலக்கணப் போலி' என்று அவர் காட்டும் பகுதியினைக் காண்க. கோவை யகம்வைத்து உலாப்புறம் காட்டுதி என்னும் தொடர் கோடீச்சுரக் கோவையில் காணப்படு கின்றது. உலா மாலை என்ற பெயராலும் உலா நூல்கள் குறிக்கப்பெற்றன என்ற செய்தி திருவிலஞ்சி முருகன் உலாக் காப்புச் செய்யுளாற் பெறப்படுகின்றது. ஏர்கொண்ட தென்னிலஞ்சி ஈசன் குருபரன்மேல் சீர்கொண்டு உலாமாலை சேர்க்கவே.2' தமிழ் வியாசர் என அழைக்கப்பெறும் நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தப் பெருமான் மீது இயற்றிய உலா


20. பிரபந்தத் தீபிகை : 19. 21. திருவிலஞ்சி முருகன் உலா : காப்புச் செய்யுள்.