பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை” எனப் பெயரியது என்பதும் ஈண்டு அறியத் தக்கதாம். மேலும் இவ்வுலா பவனி என்றும், பவனியுலா என்றும் குறிப் பிடப்படுவதுண்டு. பவனித் திருத்தேரைப் பாரீர்.” பொற் கழுக்குன் lசர்பவனித் திருவுலாப் பாட98 என வரும் தொடர்கள் இக் கருத்தினை உணர்த்துவன வாகும். உலாவின் சிறப்பிலக்கணம் புறத்தசாங்கம் தாங்கிப் போற்று என்னும் பிரபந்தத் திரட்டுச் செய்யுள் கொண்டு சிற்றில், பாவை, கழங்காடல், அம்மனையாடல், ஊசல், கிளிக்குச் சொல் பயிற்றல், யாழ் மீட்டல், புனலாடல், பொழில் விளையாட்டு முதலிய மகளிர் விளையாட்டு, பொழுது போக்குச் செயல்கள் முதலியன குறித்த செய்திகளும் உலா நூல்களில் இடம் பெறவேண்டும் என் அறியலாம். பதினாறு வயது முதல் நாற்பத்தெட்டு வயது வரை உள்ள தலைவன் மீது மட்டுமே உலா பாடப்பெறும் என்பதனைப் பன்னிரு பாட்டியல் குறிப்பிட்டுள்ளது.* உலாவின் பகுப்பு உலா நூல்கள், முதனிலையென்றும் பின்னெழுநிலை யென்றும் இருவகையாகப் பகுத்துக் காணப்பெறும்.' 22. திருக்கழுக்குன்றத்து உலா : 129. 23. திருக்கழுக்குன்றத்து உலா : காப்புச் செய்யுள். 24. நீடிய நாற்பத் தெட்டினளவும் ஆடவர்க் குலாப்புற முரித்தென மொழிப.' டப்ன்னிரு பாட்டியல் 136. 25. முதனிலை பின்னெழு நிலை யுலா வெண்கலி.' டபன்னிரு பாட்டியல் : 213.