பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

697 தலைவனது குன்றாத குடிப்பெருமை, தலைவன் வீரம், வென்றி, உலாச் செல்ல நீராடுதல், அணிகள் அணிதல், அவன் யாதானும் ஒரு வாகனத்தில் ஏறிச் செல்லுதல், உடன் வருவோர், நகர மகளிர் எதிர்கொள்ளல் முதலியன வற்றைப் பற்றிப் பாடுவதனை முதனிலை என்றும், பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக வரும் பத்துப் பருவங்களின் தன்மைகளை விளக்கிக் கூறி, ஏழு பருவ மகளிரும் பாட்டுடைத் தலைவன் பட்டத்து யானைமீது பவனி வருவதைப் பார்த்துத் தத்தம் பருவநிலைகளுக் கேற்ப உணர்ச்சியுற்று அவன்மீது காதல் கொண்டதாக அமையப் பாடுவது பின் எழுநிலை” என்றும் கூறுவர் பாட்டியல் இலக்கணிகள். புறப்பொருளைச் சார்ந்த பாடாண் திணை உலா இலக்கியங்கள் புறப்பொருள் துறையைச் சார்ந்தனவாகும். பாடப்படும் ஆண்மகனுடைய ஒழுகலாறு களை-வீரம் வென்றி கொடை முதலிய சிறப்புப் பண்பு களை விரிவாகக் கூறுவதே பாடாண்டிணையாகும். பாட்டு டைத் தலைவன் மீது ஏழு பருவப் பெண்டிரும் காதல் கொண்டு மயங்கினர் என்பது தலைவனின் ஒழுகலாந் றினை உரைத்தது ஆகுமாயெனில் அன்று, புறத்துறையில் 26. குடிநெறி மரபு கொளல்கொடை விடியல் நன்னி ஏர்டல் நல்லணி அணிதல் தொன்னக ரெதிர்கொளல் நன்னெடு வீதியின் மதகளி றுணர்தல் முதனிலை யாகும்.' -- -பன்னிரு பாட்டியல் : 133. 27. ஏழு நிலையும் இயம்புங் காலை பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் எனப் பாற்படு மகளிர் பருவத் தாதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே." - -பன்னிரு பாட்டியல் 135.