பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/693

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 நாட்டம் மிகுந்த மன்னவனை அகத்துறையில் நாட்டங் கொள்ளச் செய்ய வைப்பதோராறு என்று கூறுவர். 'உலாவில் மாதர் பலர் காதல் கொண்டனர் என்று கூறப் படுகின்றதே யன்றி அம்மாதர் பலரையும் அம் மன்னவன் கூடி இன்புற்றான் என்று கூறப்படாமையாலும், தன் அழகின் சிறப்பையும் காதலுணர்ச்சியையும் நினைந்து அம் மன்னவன் தீதில் நெஞ்சத்துக் காதல்கொள்ளும் கற்புடைத் தலைவிமேற் சென்ற கருத்தனாய்ப் போர்மேற் போதலை விடுத்து மனைக்குத் திரும்புதல் ஆண்மகனுக்குரிய ஒழுக்கமே யாதலாலும் உலாச் செய்யுளைப் புலவர் பாடினார்கள்' என்பர் இலக்கிய ஆய்வாளர்.28 உலா நூல்கள் ஏழு பருவப் பெண்டிர்மீது தலைவன் காதல் கொண்டான் என்று யாண்டும் கூறப்படாமல், பெண்டிர் தலைவன்மீது கொள்ளும் ஒருமருங்கு பற்றிய கேண்மையைக் கிளத்தும் கைக்கிளைத் திணையைச் சார்ந்ததாக உள்ளனவால், இந் நூல்கள் பெண்பாற் கைக்கிளைத் துறையைச் சார்ந்த நூல்களாகக் கொள்ள வேண்டும். இறைவன்மீது பாடப்பெற்ற உலா நூல்களில் திருவீதிவுலா வரும் அவ் அண்ணல் மீது ஏழு பருவ மகளிரும் காதல் கொண்டதாகக் கூறப்படுவதால் இத்தகைய உலா இலக்கியங்களைப் புறப்பொருள் வெண்பாமாலையார்?? கூறும் கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்" என்னும் துறைக்கண் நிறுத்தலாம். ஏழு பருவ மகளிர் மிதிலை நகர வீதிகளிலே இராம்ன் உலாவந்த செய்தி யினைக் கம்பர் பாலகாண்டம் எதிர்கொள் படலத்தில் விளங்கப் பாடியுள்ளார்: - 28. திரு. செ. வேங்கடராமச் செட்டியார்: சிற்றி லக்கியச் சொற்பொழிவுகள்: பக்கம் 129, 130. 29. புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண் படலம் : 49.