பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

699 பேதைமார் முதல்கடைப் பேரிளம் பெண்கள்தாம் ஏதியார் மாரவே ளேவங் தெய்தினார் ஆதிவா னவர்பிரான் அணுகலால் அணி கொள்கார் ஒதியார் வீதிவாய் உற்றவாறுரை செய்வாம்.' இதன் பின்வரும் உலாவியற் படலம் மேலும் இச் செய்தி களை விளங்க உரைக்கின்றது. கொங்குவேளிரும் ஏழு பருவ மகளிர் செயல்களையும் அவர்தம் நீராடலையும் சுவைபட வருணித்துள்ளார். சிந்தாமணியில் கோவிந்தையார் இலம்பகத்தில் வரும் பதினான்கு பாடல்களில் ஆநிரை மீட்டு வந்த சீவகன் மாட்டுப் பருவ மகளிர் கொண்ட காதலும், அவர்தம் செயலும் விரிவாகப் பேசப்பட். டுள்ளன. தலைமகன் முடிபுனைந்தோ, மணம் புரிந்தோ, வெற்றி பெற்றோ, தேர் மீதோ, பிற ஊர்திகள் மீதோ வீதிவலம் வருவது உண்டென்றும், அதுபோது பேதை முதலாப் பேரிளம் பெண் ஈறான பருவ மகளிர் தம் பருவ உணர்ச்சிக்கேற்பக் காதல் கொள்ளுதல் வழக்கு என்பதும் அறியப்படும். பருவ நிலைகளுக்கேற்ப உடலில் மாற்றங்களும் உள்ள நிலையில் வேறுபாடுகளும் மகளிர் மாட்டு அமையும் என்பதனை உலா கொண்டு நுண் ணிதின் அறியலாம். ஒவ்வொரு பருவத்தினர்க்கும் உரிய மனநிலையினைப் பின்வருமாறு அறிஞர் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக மகளிர் உலகியலை அறியும் நிலை எய்தாத இளம் பருவம் பேதைப் பருவம் என்றும், காம உணர்ச்சி ஒருவாறு அரும்பி அதனை உணர்ந்தும் உணராததுமான நிலையில் உள்ள பருவம் பெதும்பைப் பருவம் என்றும், அவ் வுணர்ச்சியை நன்கு எய்திய பருவம் மங்கைப் பருவம் என்றும், அவ் வுணர்ச்சியில் பயின்றுவரும் பருவம் மடந்தைப் பருவம் என்றும், அவ்வுணர்ச்சியில் முதிர்ந்து இன்பத்திற். - - 30. கம்ப ராமாயணம்; பால காண்டம்; எதிர்கொள் படலம்: 34.