பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 றிளைக்கும் பருவம் அரிவைப் பருவம் என்றும், மகப் பேற்றையடையும் பருவம் தெரிவைப் பருவம் என்றும், காமவுணர்ச்சி தளர்வுறத் தோன்றும் பருவம் பேரிளம் பெண் பருவமென்றும் ஒருவாறு பாகுபாடு செய்து கொள்வது பொருத்தமுடைத் தென்னலாம்' என்று கூறுவர் ஆய்ந்து டாக்டர் உ. வே. சா. அவர்கள்." இலக்கண விளக்கப் பாட்டியல், ஐந்துமுத லேழாண்டும் பேதை” என்றும், - - எட்டுமுதனான் காண்டும் பெதும்பை" என்றும், ஆறிரண் டொன்றே யாகுமங்கை' எனறும, - பதினான் காதிபத் தொன்பான் காறும் எதிர்தரு மடந்தை மேலாறு மரிவை' என்றும், ஆறுதலை யிட்ட விருபதின் மேலோ ஏாறுந் தெரிவையெண் ணைந்துபே ரிளம்பெண் என் றோரும் பருவத் தோர்க்குரைத் தனரே என்றும் குறிப்பிடுவதனால், ஐந்துமுதல் ஏழு வயதுவரை பேதைப் பருவம் என்றும், எட்டுமுதல் பதினொன்றுவரை பெதும்பைப் பருவம் என்றும், பன்னிரண்டு முதல் பதின் மூன்று வரை மங்கைப் பருவம் என்றும், பதினான்கு முதல் பத்தொன்பதுவரை மடந்தைப்பருவம் என்றும், இருபது

31. திருக்குற்றால நாதர் உலா, முன்னுரை. 32. இலக்கண விளக்கப் பாட்டியல் : 99. 33. இலக்கண விளக்கப் பாட்டியல் : 100. 34. இலக்கண விளக்கப் பாட்டியல் : 1.01. 35. இலக்கண விளக்கப் பாட்டியல் : 102. 36. இலக்கண விளக்கப் பாட்டியல் : 1.03.