பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 வந்த காலத்தில் உத்தம மாதராம் கற்புடை மகளிர் ஒழிந்த பிறமகளிரே அவன் வடிவழகில் ஈடுபட்டு மயங்கினர் எனக் குறிப்பிட்டுள்ளார்: - - ஞாலங் திரியா கன்னிறைத் திண்கோள் உத்தம மகளி ரொழிய மற்றைக் கன்னிய ரெல்லாங் காமன் துறந்த கணையுளங் கழியக் கவினழி வெய்தி இறைவளை கில்லார் நிறைவரை நெகிழ.' திருத்தக்க தேவரும் இந்நுட்பத்தினையும் மரபினையும் உணர்ந்தவராகவே காணப்படுகின்றார். சீவகன் உலா வந்த செய்தியினைக் கூறும்போது, அவன் ஆண்மை வீறும் தோற்றப் பொலிவைக் கண்ட கற்புடை மகளிர் பொலிக’ என்று வாழ்த்துக் கூறியதாகவும், பிற மகளிர் காமக்கண் கொண்டு கண்டு வாடி மெலிந்தனர் என்றும் கூறியுள்ள மையும் அப்பாட்டிற்குப் பொருள் கண்ட நச்சினார்க் கினியர் தமிழ்ப் பண்பாடு விளங்க உரை வகுத்த திறமும் போற்றற்குரியனவாகும். மேலும் இலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பாவில் வரும் இழைபுனை நல்லாரிவர் மணி மறுகின் என்ற தொடரில் உள்ள மறுகு' என்ற சொல்லிற்குப் பரத்தையர் வீதி' எனப் பொருள் விளக்கம் கூறுகின்றார் உரைகாரர். பிற்காலச் சைவ இலக்கிய நூல்களும், தலபுராண நூல்களும் இப் பொதுமகளிரை -உருத்திர கணிகையர்” எனவும், கல்வெட்டுகள் தளிப் பெண்டிர் எனவும் வழங்கக் காண்கிறோம். மேலும் மகளிரைப் பருவ வகையால் பிரித்துரைக்கும் வழக்குண்மை சங்க காலத்திலேயே தோன்றிவிட்டது என்பது, - பேதை யல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து' T39. பெருங்கதை; 2:7:59.52.T 40. அகநானுாறு; 7 : 6.7.