பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/698

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

703 என வரூஉம் அகப்பாடற் பகுதி கொண்டு உய்த்துணரலாம் என்பர் அறிஞர். உலா நூல்கள் பெயர் பெறும் முறை பாட்டுடைத் தலைவனின் ஊரோடு சார்த்திச் சில நூல்கள் பெயரிடப் பெற்றுள்ளன. தியாகராசப் பெரு மானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுந்த உலா, அக்கடவுள் எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகிய திருவாரூரைக்கொண்டு திருவாரூர் உலா என்று வழங்கு கின்றது. அவிநாசி உலா, திரும்பனந்தாள் உலா, தேவை யுலா, பேரூருலா முதலியனவும் இவ் வகையைச் சாரும். பாட்டுடைத் தலைவனின் இயற்பெயரோடும் சில உலாக்கள் வழங்கும். விக்கிரம சோழன் மீது பாடப்பெற்ற உலா விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழன் மீது பாடப்பெற்ற உலா குலோத்துங்க சோழனுலா இராசராச சோழன் மீது பாடப்பெற்ற உலா இராச ராச சோழனுலா என வழங்கப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பரநாதர் மீது பாடப்பெற்ற உலா ஏகாம்பர நாதர் உலா என்றும் வழங்குவது காணலாம். சில உலாக்கள் தலைவனின் ஊர்ப் பெயரோடும் இயற்பெயரோடும் இணைந்து வழங்கப்பெறு கின்றன. மதுரைச் சொக்கநாதர் உலா, தஞ்சைப் பெரு -வுடையார் உலா, திருவிலஞ்சி முருகன் உலா, குன்றக்குடி சண்முகநாதர் உலா, கயத்தாற்றரசன் உலா முதலியன இத்துறைக்கு எடுத்துக்காட்டுகளாம். பாடும் பொருளால் பெயர் பெற்ற உலா சிலேடையுலாவாகும். இவ்வுலா நூல்களிற் பெரும்பாலன, புலவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களின் மீதாவது, அல்லது தங்களை ஆதரித்த அரசர்கள் வள்ளல்கள் மீதாவது அல்லது தங்கள் ஆசிரியர்கள் மீதாவது பாடப்பெற்றனவாக அமைந்திருக்கக் காணலாம். ஆக இம் முப்பிரிவுகளில் ஒரு பிரிவாக எந்த வுலாவினையும் அடக்கலாம். சேரமான்