பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 பெருமாள் நாயனார் இயற்றியருளிய திருக்கைலாய ஞான வுலா கடவுளர்மீது பாடியதற்கும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா அரசர்கள் மீது பாடிய தற்கும், படிக்காசுப் புலவரால் பாடப்பெற்ற சிவந்தெழுந்த பல்லவராயன் உலா வள்ளல் மீது பாடப் பெற்றதற்கும், தம்பியாண்டார் நம்பிகள் பாடியருளிய ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை அடியார் மீது பாடியதற்கும், தத்துவராயர் பாடிய ஞானவினோதன் உலாவும், சிவப் பிரகாசர் பாடிய சிவஞானபாலைய தேசிகர் உலாவும் ஞானாசிரியர் மீது பாடியதற்கும் எடுத்துக்காட்டுகளாகும். இதுகாறும், உலாவின் தோற்றம், வளர்ச்சி, இலக்கணம் முதலிய செய்திகளை ஒருவாறு கண்டோம். இனி, சேர மான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கைலாய ஞான வுலாவினைப் பற்றிக் காண்போம். திருக்கைலாய ஞானவுலா உலா நூல்களில் காலத்தால் முற்பட்டது திருக்கைலாய ஞானவுலாவாகும். எனவே இஃது ஆதி உலா என்றும். கூறப்பெறும். திருப்புகழ் தந்த அருணகிரி நாதர், - ஆத ரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடேமு னாளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையில் ஏகி, ஆத அந்தஉ லா ஆசு பாடிய - - சேரர் கொங்குவை காவூர் கனாடதில் ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே." 1 என்று பாடியுள்ளார். சிவபெருமான் தேவாரத்தில் ஆதி என மூவரால் அழைக்கப்பட்டுள்ள காரணத்தினால், சிவ. பெருமானின் தெய்வீக உலா பற்றிய இந் நூல் ஆதி உலா என வழங்கல் பொருந்தும் என்பர் அறிஞர். திருக்கைலாயத்தின் கண் நிகழ்ந்த சிவ பி ரா னின் உலா நிகழ்ச்சியினைப் பலபடப் பாராட்டிப் பாடியதனால் 41. திருப்புகழ் ; 104.