பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

705 இந் நூல் திருக்கைலாய ஞான வுலா என்றும் வழங்கப் பெறும். இந் நூல், தான் துவலும் பொருட் சிறப்புக் காரணமாக ஞானவுலா என்றும் வழங்கப் பெறும். திரு வுலாப் புறம்' என்று பொதுப்பட இந்நூலினைப் பெரிய புராணம் குறிப்பிடக் காணலாம்: பெருகு வேதமும்_முனிவரும் துதிப்பரும் பெருமையாய் உனை அன்பால் திருவு லாப்புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெறல் வேண்டும் மருவு பாசத்தை அகன்றிட வன்றொண்டர் கூட்டம் வைத் தாய் என்ன அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார். இதனால் ஆதியுலாவினை நயந்த ஆதியும் அந்தமு மில்லா அருட்பெருஞ் சோதியின் அருளுடைமையும், இலக்கியத் தினை இனிதுறச் சுவைக்கும் ஈடுபாடும் தெரிகின்றன. ஏகாம்பர நாதருலா பாடிய இரட்டையர்கள் இவ்வுலா வினிடத்து ஈடுபாடுடையவர்கள் என்பதனை, S S S S S S S S S S S S S S S S S S S S STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS STS SS வழுத்திகர்க்குப் போத வினியதொரு பொன்வண்ணத் தந்தாதி ஆதி யுலாவோ டமைத்தோனும் என்றும், ஏகாம்பரநாதருலாவினை முடிக்குங்கால்,

  • * * * * ..................................முடிமேல் நிலாவுடையான் தேமா நிழலுடையான் சேரன்

உலாவுடையான் போந்தான் உலா என்றும் குறிப்பிட்டுள்ளதனால் அறியலாம். இந்நூல் பதினோராந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந் நூலினைச் சேரமான் பெருமாள் நாயனாரிடமிருந்து கேட்ட சிவபெருமான் மகிழ்ந்து அவரைச் சிவகணங் களுக்குத் தலைவராக்கிச் சிறப்புச் செய்தார் என்பர். பின்னர் இவ்வுலா மாசாத்தன் என்பவரால் திருப்பிடவூரில் வெளிப்படுத்தப்பட்டது என்பர். 42. பெரியபுராணம்; வெள்ளானைச் சருக்கம் : 47, சே. செ. இ.45