பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 காமவேள் கொடிப்படைகள் தாங்கி யாவர்க்கும் முன்ன்ே அணிபெறச் சென்றான். சாத்தனார் குதிரையின் மேல் வந்தார். வேழமுகத்து விநாயகரும் உலாவிற் பங்கு கொண்டு மெல்ல நடந்து வந்தார். சப்தமாதர்கள் என்னும் மங்கையர் எழுவரும் சூழ்ந்து உடன் வரு கின்றனர். கொற்றவை ஆளியின் மீதமர்ந்து அழகுற வ ரு கி ன் றா ள். பதினெண்வகைத் தேவகணத்தவர் எல்லாப் பக்கங்களிலும் பெருந்திரளாக உடன் வந்தனர். சல்லரி, தாளம், தகுணரிதம், தத்தளகம், கல்லலகு, கல்லவடம், மொந்தை, தட்டழி, சங்கம், சலஞ்சலம், தண்ணுமை, பேரி, கரதாளம், குடமுழவம், கொக்கரை, வீணை, குழல், யாழ், தடாரி, படாகம், மத்தளம், துந்து பி, முருடு முதலிய இசைக் கருவிகள் பலவும் எம்மருங்கினும் எழுந்தியங்கின. மங்கலம் பாடுவார் இறைஞ்சினர். மல்லரும் கிங்கரரும் பல்வகை ஒசைகளைச் செய்து உலாக் காண்போரை மகிழ்வித்தனர். அறுவகைப் பருவங்கள், பல வகை யோகங்கள், அரிய தவங்கள், கேசரி சாம்பவிதேனு முதலான வழிபாட்டு முத்திரைகள், மந்திரங்கள், ஊழி ஆண்டு திங்கள் கிழமை நொடி முதலான காலக்கூறுகள், மூவகைப் பண்புகள் முதலியனவற்றிற்கு முறையே உரிய ஆட்சிக் கடவுளர்களும், வாலகிலியர் என்பவர்களும் முறையே திரண்டு வந்தனர். இத்தகு சிறப்புகளுடன் இறைவன் கடிகமழும் பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் போல் திருவீதி உலாப் போந்தான். குழாங்களின் நிலையும் செயலும் ஈசன் உலா வரும் வீதிகளில் அமைந்துள்ள மாளிகைகள், அவ் ஈசனைப்போலவே கங்கையைத் தாங்கி, மறைகளை ஒம்பி, பிறையும் தூல முங்கொண்டு, வெள்ளை யணிந்து பிறங்கின. சீர்த்தி நிறைந்த இத்தகு மாட ம ன வளி ைக க ளி ல் மலர்ப்படுக்கையே போர்க்களமாக, சிலம்புகள் பறையாக, கண்களே அம்பாக, புருவங்கள்