பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

709 வில்லாக, அல்குலாகிய தேரைச் செலுத்திக் கொங்கை களாகிய குதிரைகள் பொங்கிச் சிறப்பக், கணவர்களின் உள்ளமெனும் அரியணையைக் கவர்ந்து பெறுதற் பொருட்டுக் கலவிப்போர் விளைவிக்கும் மகளிர் பலரும் சிவபெருமான் உலா வரும் படை முழக்கம் கேட்கின்றனர். உடனே, பொற்குடத்து வைத்துள்ள நீரால் முகம் விளக்கி நற்பெருங் கோலங்கள் நலமுறப் புனைந்து பேதை முதற் பேரிளம் பெண் ஈறாக யாவரும் திரண்டு நின்றனர். அவர்கள் அழகுற அணிந்திருந்த சூளிகை, சூட்டு, சுளிகை, சுட்டிகை, வாளிகை, பொற்றோடு முதலான அணி கலன்கள் ஒளியுமிழ்ந்தன. அவர்களிற் சிலர் மாளிகையின் மாடத்திற்கு ஒடிச்சென்று நின்று உலாக் கண்டனர். மாதர் சிலர் மால் உறப்பெற்று மயங்கி நின்றனர். ஒரு சிலர் சிவன் எமக்குத் தன் கொன்றையந்தாரைத் தாராது போயின் நள்ளிரவு எம்மை நடுக்கஞ் செய்விக்குமே” என்றனர். காம வேளோ இவன்? எனச் சிலர் கலங்கினர். வேறு சிலர் இவன் காமவேள் அல்லன்; அவ னினும் அணி நலம் சிறக்கப்பெற்ற பேரழகன்' என்பர். பின்னும் சிலர் இப் பேரழகன் யாவனோ என வியந்து நிற்பர். இத்தகு காதல் மயக்கம் மீதுாரப் பெற்றமையின் அணிகலன்களை முறை மறந்து அணிவார்கள். ஒரு கண்ணிற்கு மைதீட்டிப் பிறிதொரு கண்ணிற்கு மைதீட்டாமலே விரைந்தோடி வந்து தெருவை அடைவர். தமது வடிவ நிழலையே தாம் என மயங்கித் தியங்கி, அணித்தே இருக்கும் கண்ணாடியின் மேற் செம்பஞ்சுக் குழம்பினைத் தெளிப்பார்கள். தம் கையில் இருக்கும் பந்தினைக் கிளியென நினைத்து, அதற்குச் சொல் பயிற்றி நிற்பார்கள். கடவுள் மீது தங்கள் கருங்கண்ணாகிய வலையை வகையுற வீசுவார்கள். திண்ணிய நிறை என்னும் தாழ் வீழ்த்தக் கற்பு என்னும் கதவைத் திறந்துவைத்துக் காதல் மீதுார்ந்த நிலையில் கவினுறக் காட்சியளிக்கின்றனர். -