பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710, (3 பதை அவர்களுள் பேதைப் பருவத்தினள் ஒருத்தி, ஐந்து நிறைந்து ஏழு ஆண்டு எய்தப் பெறாத வயதினள். வெண் மணல் கொண்டு சிறு சோறு சமைத்து மகிழ்பவள். இடை யழகால் வரும் இறுமாப்பு எய்தாதவள். உடையழகால் பிறர் நெஞ்சை வாங்கும் நுட்பம் அறியாதவள். அன்னம் போலும் நடையால் கெளவை நோய் செய்யாதவள். தம்மைக்கண்டு வசமிழந்தவர், பிறவற்றில் வெறுப்புக் கொள்ளுமாறு செய்யும் தொழிலை அவள் கதிர் முலைகள் இன்னும் கற்றில. நோய் நோக்கம் யாரையும் செய்யாத அவள், தன் செவ்வாயினின்றும் பிறக்கும் செஞ் சொல்லாலும் பிறரை வஞ்சிக்கும் ஆற்றலிலாள். தன் கூந்தல் நன்கு நீள வளராத நிலையில், திறமை தோன்ற நீவிப் பூக்கள் முடிக்கும் திறன் அறிந்திலள். மூங்கில் நிகர்க்கும் அவள் தோள்கள் ஆடவர்க்கு அயர்வைச் செய்தில. சொல்லுவது ஒன்றும் நினைப்பது வேறொன்றும், செய்வது பிறிதொன்றுமாய் ஒரு நிலையில் நில்லாது ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றித் தாவிச் செல்கிறது அவள் மனம். திருமாலின் ஐம்படைத்தாலியினைக் கழுத்தில் பூண்டு, உடம்பிற் சந்தனச் சேறாடி, நீலச் சிற்றாடையை நெகிழ்த்துக்கட்டி, அழகிய பந்தரின்கீழ் மரப்பாவை வைத்து விளையாட்டயர்ந்து கொண்டிருந்தாள் அப்பாவை போன்ற பேதை. அதுகாலையில் அவள் தாயை இவளுக்குத் தந்தை யார்?" என்றொருத்தி வினவ, அதற்கு அத்தாய் அந்த மில் சீர் ஈசன் எரியாடி’ என மறுமொழி பகன்றாள். அதுபோது, தாய் விளையாட்டாகக் கூறியதன் நுட்பமறியாது போனாள் அப்பேதைப் பெண். ** , . பெதும்பை காமநூற் கணக்கில் சில நாள்கள் பழகினவள் போன்ற உணர்வுற்று மயங்கிய ஏழு முதல் பதினொன்றுக்குள் வயது கொண்ட பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பருவத்