பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

711. தினள் ஒருத்தி மயில் போன்ற சாயலும் அழகும் நிரம்பியவள். அவள் முகம் தாமரையும் திங்களும் போன்று திகழ்ந்தது. காதுகளிற் குழைகள் துலங்கின. கண்கள் கெண்டை மீன்களை நினைவூட்டின. இதழ்கள் கொவ்வைக் கனிகள் போன்று சிவந்து திகழ்ந்தன. பற்கள் முத்துக்களை நிகர்த்தனவாய் வெண்மை மிக்கு விளங்கின. புருவங்கள் வில்லைப்போன்று விளங்கின. அவள் நெற்றியில் சுட்டியும், கைகளிற் சிறு வளையும் அணிந்திருந்தாள். கால்களிற் கிண்கிணி ஒலித்தது. இடையை ஒளியும் நிறமும் தயங்கும் அழகிய ஆடை அணிசெய்தது. பொதிய மலைச் சாந்தத் தைத் தோள்களிற் பூசியிருந்தாள். கண்டார் கருத்துகளைக் கவரும் முலைகளைப் பெற்றிருந்தாள். அவளது தோற்றப் பொலிவு கடலில் தோன்றிய அமிழ்தமே ஒரு வடிவு கொண்டு வந்ததோ என வியக்கவைத்தது. கூந்தலிலே மலர் மாலைகள் துலங்கின. இளங்கிளியின் சொற்களை யொத்து அவள் சொற்கள் அமைந்தன. வாள் போன்ற கண்களில் வகையுற அஞ்சனம் தீட்டியிருந்தாள். கழுத்தில் மணியாரமும் விரல்களில் மோதிரமும், தோள்களிற் கடகமும் அணிந்த பெதும்பை, தன் தோழியர் சூழ, வெண் மணலைக் கொண்டு மன்மதனின் வடிவத்தை அமைத்து, அவனுக்குரிய கரும்பு வில்லையும், மலர் அம்பையும், தென்றல் தேரையும் மனம் ஒன்ற வரைந்துகொண்டி ருந்தாள். அக்காலையில் சிவபெருமான் வெள்விடையேறி அவண் வர, பெதும்பைப் பருவமகள் நலம், நாண், அறிவு, நிறை முதலானவற்றைத் தோற்றாள். கைவளைகள் கழன்றோடின. கண்களாகிய வண்டுகள் இறைவனைப் பின் தொடர, ஆடை நெகிழத் தன்னை மறந்தவளாய்ச் செய்வதறியாது திகைத்து நின்றாள். மங்கை மங்கைப் பருவத்தாள் கங்கைச் சுழியனைய உந்தியாள். கைகளும், கால்களும், கொங்கைகளும் முகமும் தாமரை மலரை ஒத்திருந்தன. இடை வஞ்சிக்கொடியையும்,